Wikipedia

Search results

Thursday, April 25, 2013

அகத்தியர் வாழும் பொதிகை மலை..!


அகத்தியர் வாழும் பொதிகை மலை..!

ஆத்மார்த்மாக செய்யும் எந்த தொழிலிலும் ஜெயிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர். கம்ப்யூட்டரின் உதவியோடு மிக வித்தியாசமாக விளம்பரங்கள் வடிவமைப்பதில் இவருக்கு நிகர் இவரே.

மூச்சுவிட நேரமில்லாத இவரது களப்பணியில் இவர் இளைப்பாறவும்,களைப்பை போக்கிக் கொள்ளவும் அவ்வப்போது செல்வது, மலைப்பிரதேசங்களில் உள்ள ஆன்மிக தலங்களுக்குதான்.

அப்படிப்பட்ட இடம்தான் அகத்திய மாமுனி எழுந்தருளியிருக்கும் பொதிகைமலை. தமிழக கேரளா மாநிலங்களின் எல்லையில் இருந்தாலும் இப்போதைக்கு கேரளா வழியாகத்தான் செல்ல முடியும்.

பொதிகை மலையின் உச்சியில் உள்ள அகத்தியரை தரிசனம் செய்யவேண்டும் என்றால் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து ஒன்றரை மணிநேர வாகன பயணத்திற்கு பின், பொதிகை மலைக்கு செல்லும் மலைப்பாதையில் வனத்துறையின் சோதனைச் சாவடியை அடையலாம்.

சோதனைச் சாவடியில் ஒருவருக்கு முன்னூற்று ஐம்பது ரூபாய் வீதம் பணம் கட்டிவிட்டு, தங்கள் சொந்த பொறுப்பில் போய்வருவதாகவும், பயணத்தின் போது உயிருக்கோ, உடமைக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு தாங்களே பொறுப்பு என்றும் எழுதிக் கொடுத்துவிட்டு செல்ல வேண்டும்.

நான்கு பேர் கொண்ட குழு என்றால் ஒரு வழிகாட்டியை வனத்துறையே ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கிறது. அங்கு இருந்து காலையில் கிளம்பினால் சூரியனைக்கூட பார்க்கமுடியாத அடர்ந்த காட்டிற்குள் ஒன்றரை நாள் பயணத்திற்கு பிறகு அகத்தியரை தரிசித்துவிட்டு, மீண்டும் ஒன்றரை நாள் பயணம் செய்து திரும்பவேண்டும்.

அவரவருக்கான உணவுப்பொருள், இரவில் தூங்க தேவைப்படும் போர்வை, மழைவந்தால் பாதுகாத்துக் கொள்ள ரெயின்கோட், அட்டை கடியில் இருந்து காப்பாற்றிக் கொள்ள மூக்குப்பொடி, வேப்பெண்ணெய், மற்றும் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டும், வழியில் யானை போன்ற காட்டினங்களை எதிர்கொண்டும் போய்வரவேண்டும்.

பல இடங்களில் காணப்படும் செங்குத்தான பாறைகளில் தொங்கவிடப்பட்டுள்ள கயிறை அல்லது கம்பியை பிடித்துக் கொண்டுதான் ஏற வேண்டும், அதே போல இறங்க வேண்டும், கொஞ்சம் கவனம் தவறினாலோ, கால் பிசகினாலோ பல ஆயிரம் அடி உயரத்தில் இருந்து மீள முடியாத பள்ளத்தில் விழவேண்டியிருக்கும்.

இதை படிக்கும் யாருக்கும் போகத் தைரியம் வராது தயக்கம்தான்வரும் ஆனால் இதைவிட அதிகமாகவே “ரிஸ்க்குகளை’ எதிர்பார்த்து சேர்மராஜ் கிளம்பிவிட்டார், காரணம் தனது ஞானகுருவான அகத்தியரை சந்திக்க போகிறோம் என்று மனதிற்குள் மழைபோல பெய்த சந்தோஷம், இவரது கருத்தையொத்த நண்பர்கள் பதினோரு பேர் சேர்ந்து கொள்ள பயணம் சிறப்பாக அமைந்துவிட்டது.

Monday, April 15, 2013

மைதா எப்படி தயாரிகிறார்கள்


மைதா எப்படி தயாரிகிறார்கள் ? (Wheat flour/tepung gandum)
நன்றாக மாவாக அரைக்க பற்ற கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide) என்னும் ரசாயானம் கொண்டு    வெண்மையாக்குகிறார்கள்,அதுவே மைதா .
Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயானம் .இந்த ரசாயானம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரிழிவு க்கு காரணியாய் அமைகிறது .

இது தவிர Alloxan என்னும் ரசாயானம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமகுகிறது . இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நீரிழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது , ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது.
   
மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல ,மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் சீரான சீரண சக்தியை குறைத்து விடும் . தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்த்தி கிடைக்கிறதா?

இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணபடுகிறது பரோட்டா கடை ,அந்த பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா ,தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே.

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டனர்..மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.


Friday, April 12, 2013

உறக்கம்: Sleep

உறக்கம் என்பது நாள்தோறும் உழைத்து களைத்த உடலுக்கு அளிக்கும் ஓய்வு தூக்கத்திற்கும் உடல் நலத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளது.

இது பற்றி பல்வேறு ஆய்வுகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருகின்றன. சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று, சரியாக தூங்காதவர்களே பிரச்சினைகளில் ஈடுபடுகிறார்கள்' என்று கூறுகிறது. தூங்குவதனால் உடம்பில் ஏற்பட்ட சோர்வும், வலியும் நீங்கி உடல் வளர்ச்சி பெறும். தூங்குவதற்கும் சில விதி முறைகள் இருக்கிறது.
அதில் முதன்மையானது நேரந்தவறாமை. தினமும் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்ல வேண்டும். குறைந்தபட்சம் தினமும் 6 முதல் 8 மணி நேரமாவது உறங்க வேண்டும்.
எப்போதும், இரவில் மட்டுமே தூங்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது. பகல் தூக்கம் வாதத்தை வரவழைக்கலாம். இரவு தூக்கம் உடலுக்கு நல்ல குளிர்ச்சி யைத் தரும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

எந்த திசையில் தலைவைத்து படுப்பது என்னமாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உறக்கமும் திசைகளும் கிழக்கு திசையில் தலை வைத்துப் படுத்தால், ஒருவன் தான் பிறந்த ஊரில் இருக்கும் போது எப்படி மகிழ்ச்சியாக இருப்பானோ அந்த அளவிற்கு மகிழ்ச்சியை தருமாம்.

மேற்கு திசையில் தலைவைத்துப் படுப்பவர்கள் சொந்த ஊரைவிட்டு வெளியூருக்கு வந்து வாழ்க்கை நடத்துபவர்களுக்கு கிடைக்கக் கூடிய மகிழ்ச்சியை தருமாம்.

மாமியார் வீட்டில் தங்கும் மகிழ்ச்சியைத் தருவது தெற்கு(South) திசை.

ஆனால் வடக்கில் தலை வைத்து உறங்குவது நல்லதல்ல என்கின்றன சாஸ்திரமும், விஞ்ஞானமும். காந்த ஈர்ப்பு விசையானது வடக்கில் தலை வைத்து உறங்குபவர்களின் ஓய்வினை குறைத்து விடுகிறதாம்.
எனவேதான் வடக்கு திசை ஆகாது என்கின்றனர். நோயாளிகளுக்கு ஏற்ற திசை நோயாளிகள் தங்களுக்கு வந்துள்ள நோய்கள் விரைவில் குணம் பெற கிழக்கு திசையில் தலைவைத்து உறங்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

மேற்கு பரவாயில்லை,

தெற்கு(South) திசை ஆயுள் பெருகும்.
வடக்கு கூடாது என்று மருத்துவ நூலில் கூறப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியாக இருக்க உறங்கும் போது இடது(Left) பக்கமாக திரும்பி படுக்க வேண்டும்.
இடது(Left) கையை மடக்கித் தலையின் கீழே வைத்து கொள்ள வேண்டும். இடது புறமாக ஒருக்களித்து தூங்கும் போது, வலதுபுற நாசி வழி யாக மூச்சுக் காற்று இயங்கும். இது நல்ல தூக்கத்தை தரும்.

உடம்பு க்குத் தேவையான வெப் பம் கிடைக்கும். இப்படிப் படுப்பதால் நோய் விரைவில் குண மாவதாக கூறுவார்கள்.
இடது காலை மடக்கி ஒருக்களித்து வலது காலை நீட்டி இடது கால் மேல் வைத்து, வலது கையை நீட்டி, வலது கால் மீது வைத்துக் கொண்டு தூங்க வேண்டும்
படுக்கையில் வலது பக்கம் திரும்பி படுத்து தூங்குபவர்களைவிட, இடது பக்கம் திரும்பி தூங்குபவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியாகவும், குறைந்த மன அழுத்தத்துடன் இருப்பார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். படுக்கையில் இடது பக்கம் திரும்பி தூங்கும் பழக்கம் உள்ளவர்களில் 25 சதவீதம் பேர் அதிக மகிழ்ச்சியாகவும், நேர்மறையான எண்ணங்களுடன் இருக்கின்றனர். வேலைப்பளு மற்றும் அதனால் ஏற்படும் மன அழுத்தத்தை திறம்பட கையாள்வதுடன், அதிக மன உறுதியுடன் உள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டள்ளது
அதிகம் சம்பாதிக்கலாம் வலது பக்கம் திரும்பி தூங்குபவர்களில் 18 சதவீதம் பேர் மட்டுமே மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும், மோசமான மனநிலை ஏற்படுவதால் தூக்கத்தில் அடிக்கடி எழுவதாகவும் கூறினர். இதற்கிடையில், இடப்பக்கம் தூங்குபவர்கள் மகிழ்ச்சியாக வேலை செய்தாலும், வலப்பக்கம் தூங்குபவர்கள் அதிகம் சம்பாதிக்க முற்படுகின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள்
கவிழ்ந்து படுக்க கூடாது கவிழ்ந்து படுப்பது கூடாது. பல மணி நேரம் அசைவில்லாமல் உறங்குவதால், சிறுநீரிலுள்ள கால்சியம், அமிலம் ஆகியவை திரண்டு சிறுநீரக கற்கள் உருவாவதாக தெரிய வந்துள்ளது. குப்புறப்படுக்கும் போதே அதிகமாக சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.

Sunday, March 17, 2013

இயற்கை வயாகரா முருங்கை பற்றி உங்களுக்கு தெரிந்ததும்... தெரியாததும்...


முருங்கையும், மூலிகையும் வயகராவை விட இரண்டு மடங்கோ 100 மடங்கோ, இல்லை ஆயிரம் மடங்கு சிறந்தவை ஆகும்.முருங்கையின் அனைத்து உறுப்புகள் மற்ற மருந்துப் பொருளோடுசேர்ந்தால் வயகராவை விட பன்மடங்கு பயனளிக்கிறது. உறவில் முருங்கையின் பங்களிப்பு மகத்தானது. 

ஆண்மை அதிகரிக்க : 
முருங்கைக் கீரை, முருங்கைப்பூ, இவ்விரண்டையும் சம அளவில் சேர்த்து, சிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி, பொரித்து, அதில் வேர்க்கடலையை வறுத்துப் பொடி செய்து, தூவி உணவுடன்சேர்த்துண்ண ஆண்தன்மை அதிகரிக்கும்.. விறைப்பு நீடிக்கும், வேகமும் பெருகும், வானளவு இன்பத்தைப் பெண்ணுக்கு வாரி வழங்கிட ஆண்தன்மை வந்து துள்ளும், கீரையும், பூவும் சமஅளவில் சேர்த்து, வேகவைத்து கடைந்து குழம்பாகவும் உபயோகிக்கலாம்.

விந்து விருத்தியாக : 
முருங்கைப் பூ 10, சுத்தமான பசும்பாலில் சேர்த்து, காய்ச்சி இரவு படுக்கும்போது குடிக்க, விந்து விருத்தியாகும், தேகம் பலம் பெறும், அத்துடன் பேரீச்சம்பழம் சேர்த்துச் சாப்பிட, விந்துவிருத்தியாவது மட்டுமின்றி விந்து கெட்டியாகும். விந்து சீக்கிரம் முந்தாமலும் இருக்கும். தெவிட்டாத தேன் உண்டது போல், தீராத தாகம் தீர்ந்தது போல், ஆனந்தக் கடலில் ஆண், பெண்மூழ்கலாம்.

காமம் பெருக :
முருங்கைப் பூவை உணவாகவோ, மருந்துகளில் சேர்த்தோ, பச்சையாகவோ எந்த விதத்தில், எந்த மாதிரி உபயோகப்படுத்தினாலும், உண்டபின் உடலில் காமத்தைப் பெருக்கும். இச்சையைத்தூண்டும். பச்சையாக நான்கு பூவை தினம் இருவேளை மென்று திண்ணலாம். அரைக்கீரையுடன் அரை பங்கு முருங்கை பூ சேர்த்துக்கடைந்து, சோற்றுடன் சாப்பிடலாம். காமம் பெருகும்,வயகரா உண்டால், காமஉணர்ச்சி வந்து, உடன் போய்விடும். ஆனால் இந்த இயற்கை வயகரா உண்டால், அணையில் நீர்த்தேக்கம் போல் காம உணர்ச்சி அப்படியே அலைமோதி நிற்கும்.வயகரா உண்டவருக்கு ஒருவித மின்சாரம் தாக்கியது போன்ற காம வலிப்பு வந்து போய்விடும். ஆனால் இந்த முருங்கை வயகரா உண்டால் உடலிலுள்ள 72,000 நரம்புகளிலும் இன்பக் களிப்புஏகாந்த நடனமிடும்.

உடலுறவில் மகிழ்ச்சி நீடிக்க : 
முருங்கையின் இளம் பிஞ்சுக் காயைக் கொண்டு வந்து அனலில் காட்டி, சாறு பிழிந்து குடிக்க, காம உணர்வு பெருகும், மனையாளுக்கு பெருமகிழ்ச்சி அளிக்குமளவு உடலுறவில் இன்புறல்நீடிக்கும். சிலருக்கு மனைவியோடு எவ்வளவு நேரம் பேசிக் கொண்டு, விளையாடிக் கொண்டிருந்தாலும் உடலுறவில் ஈடுபட்டால் ஒரு நிமிடத்தில் விந்து வெளியாகி விடும். இதனால் அவர்கள்மிகுந்த வேதனைப்படுவர். இப்படிப்பட்டவர்களுக்கு இம்முறை சிறந்த பலனளிக்கும்.

உறவில் பரவசம் பெருக: 
முருங்கைக் கீரையைப் பொடியாக அரிந்து, அதில் கேரட் திருவி போட்டு, பசு நெய் விட்டு, பொரித்து, இறுதியில் முட்டையை அதில் ஊற்றி கிளறி, பொரித்துண்ண ஆண்கள் பாலுறவில்பரவசமடைவர். ஆண்மை அதிகரித்து ஆனந்தம் அடைவர். இல்லாள் கணவன்மீது ஈடில்லா பாசமும், மதிப்பும் கொள்வாள். இல்லற சுகத்தில் இருவரும் ஒரு நிலையில் உல்லாசம் காண்பர்.

Monday, September 19, 2011

Hindu Blog: Symbolic Meaning of Acts Performed During Hindu Pu...

Hindu Blog: Symbolic Meaning of Acts Performed During Hindu Pu...: A simple prayer before the deity with hands folded and placed near the heart is the most common form of praying in Hindu religion. But there...

Hindu Blog: Understanding Hinduism – Hindu Religion Basics for...

Hindu Blog: Understanding Hinduism – Hindu Religion Basics for...: Many people find it difficult to understand Hinduism because of the numerous deities, scriptures and schools of thought. The difficulty is p...

Hindu Blog: How to Do or Perform Navratri Puja – The South Ind...

Hindu Blog: How to Do or Perform Navratri Puja – The South Ind...: Navratri, the nine-night festival, honors Goddess Durga, Goddess Lakshmi and Goddess Saraswathi in South India . It is known as Bommla Koluv...