Wikipedia

Search results

Monday, April 15, 2013

மைதா எப்படி தயாரிகிறார்கள்


மைதா எப்படி தயாரிகிறார்கள் ? (Wheat flour/tepung gandum)
நன்றாக மாவாக அரைக்க பற்ற கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide) என்னும் ரசாயானம் கொண்டு    வெண்மையாக்குகிறார்கள்,அதுவே மைதா .
Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயானம் .இந்த ரசாயானம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரிழிவு க்கு காரணியாய் அமைகிறது .

இது தவிர Alloxan என்னும் ரசாயானம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமகுகிறது . இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நீரிழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது , ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது.
   
மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல ,மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் சீரான சீரண சக்தியை குறைத்து விடும் . தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்த்தி கிடைக்கிறதா?

இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணபடுகிறது பரோட்டா கடை ,அந்த பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா ,தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே.

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டனர்..மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.


No comments:

Post a Comment