உறக்கம்
என்பது நாள்தோறும் உழைத்து களைத்த உடலுக்கு
அளிக்கும் ஓய்வு தூக்கத்திற்கும் உடல்
நலத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளது.
இது பற்றி பல்வேறு ஆய்வுகள்
அவ்வப்போது வெளிவந்து கொண்டிருகின்றன. சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று,
சரியாக தூங்காதவர்களே பிரச்சினைகளில் ஈடுபடுகிறார்கள்' என்று கூறுகிறது. தூங்குவதனால்
உடம்பில் ஏற்பட்ட சோர்வும், வலியும்
நீங்கி உடல் வளர்ச்சி பெறும்.
தூங்குவதற்கும் சில விதி முறைகள்
இருக்கிறது.
அதில் முதன்மையானது நேரந்தவறாமை. தினமும் சரியான நேரத்திற்கு
தூங்கச் செல்ல வேண்டும். குறைந்தபட்சம்
தினமும் 6 முதல் 8 மணி நேரமாவது
உறங்க வேண்டும்.
எப்போதும்,
இரவில் மட்டுமே தூங்க வேண்டும்.
பகலில் தூங்கக் கூடாது. பகல்
தூக்கம் வாதத்தை வரவழைக்கலாம். இரவு
தூக்கம் உடலுக்கு நல்ல குளிர்ச்சி யைத்
தரும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
எந்த திசையில் தலைவைத்து படுப்பது என்னமாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உறக்கமும்
திசைகளும்
கிழக்கு திசையில்
தலை வைத்துப் படுத்தால், ஒருவன் தான் பிறந்த
ஊரில் இருக்கும் போது எப்படி மகிழ்ச்சியாக
இருப்பானோ அந்த அளவிற்கு மகிழ்ச்சியை
தருமாம்.
மேற்கு
திசையில் தலைவைத்துப் படுப்பவர்கள் சொந்த ஊரைவிட்டு வெளியூருக்கு
வந்து வாழ்க்கை நடத்துபவர்களுக்கு கிடைக்கக் கூடிய மகிழ்ச்சியை தருமாம்.
மாமியார் வீட்டில் தங்கும் மகிழ்ச்சியைத் தருவது தெற்கு(South) திசை.
ஆனால் வடக்கில் தலை வைத்து உறங்குவது நல்லதல்ல என்கின்றன சாஸ்திரமும், விஞ்ஞானமும். காந்த ஈர்ப்பு விசையானது வடக்கில் தலை வைத்து உறங்குபவர்களின் ஓய்வினை குறைத்து விடுகிறதாம்.
எனவேதான்
வடக்கு திசை ஆகாது என்கின்றனர்.
நோயாளிகளுக்கு ஏற்ற திசை நோயாளிகள்
தங்களுக்கு வந்துள்ள நோய்கள் விரைவில் குணம்
பெற கிழக்கு திசையில் தலைவைத்து
உறங்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
மேற்கு
பரவாயில்லை,
தெற்கு(South) திசை ஆயுள் பெருகும்.
வடக்கு கூடாது என்று மருத்துவ நூலில் கூறப்பட்டுள்ளது.
மகிழ்ச்சியாக இருக்க உறங்கும் போது இடது(Left) பக்கமாக திரும்பி படுக்க வேண்டும்.
இடது(Left)
கையை மடக்கித் தலையின் கீழே வைத்து
கொள்ள வேண்டும். இடது புறமாக ஒருக்களித்து
தூங்கும் போது, வலதுபுற நாசி
வழி யாக மூச்சுக் காற்று
இயங்கும். இது நல்ல தூக்கத்தை
தரும்.
உடம்பு
க்குத் தேவையான வெப் பம்
கிடைக்கும். இப்படிப் படுப்பதால் நோய் விரைவில் குண
மாவதாக கூறுவார்கள்.
இடது காலை மடக்கி ஒருக்களித்து
வலது காலை நீட்டி இடது
கால் மேல் வைத்து, வலது
கையை நீட்டி, வலது கால்
மீது வைத்துக் கொண்டு தூங்க வேண்டும்.
படுக்கையில் வலது பக்கம் திரும்பி
படுத்து தூங்குபவர்களைவிட, இடது பக்கம் திரும்பி
தூங்குபவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியாகவும், குறைந்த மன அழுத்தத்துடன்
இருப்பார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
படுக்கையில் இடது பக்கம் திரும்பி
தூங்கும் பழக்கம் உள்ளவர்களில் 25 சதவீதம்
பேர் அதிக மகிழ்ச்சியாகவும், நேர்மறையான
எண்ணங்களுடன் இருக்கின்றனர். வேலைப்பளு மற்றும் அதனால் ஏற்படும்
மன அழுத்தத்தை திறம்பட கையாள்வதுடன், அதிக
மன உறுதியுடன் உள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டள்ளது.
அதிகம் சம்பாதிக்கலாம் வலது பக்கம் திரும்பி
தூங்குபவர்களில் 18 சதவீதம் பேர் மட்டுமே
மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும், மோசமான மனநிலை
ஏற்படுவதால் தூக்கத்தில் அடிக்கடி எழுவதாகவும் கூறினர். இதற்கிடையில், இடப்பக்கம் தூங்குபவர்கள் மகிழ்ச்சியாக வேலை செய்தாலும், வலப்பக்கம்
தூங்குபவர்கள் அதிகம் சம்பாதிக்க முற்படுகின்றனர்
என்கின்றனர் ஆய்வாளர்கள்.
கவிழ்ந்து படுக்க கூடாது கவிழ்ந்து
படுப்பது கூடாது. பல மணி
நேரம் அசைவில்லாமல் உறங்குவதால், சிறுநீரிலுள்ள கால்சியம், அமிலம் ஆகியவை திரண்டு
சிறுநீரக கற்கள் உருவாவதாக தெரிய
வந்துள்ளது. குப்புறப்படுக்கும் போதே அதிகமாக சிறுநீரகக்
கற்கள் உருவாகின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.
No comments:
Post a Comment