Wikipedia

Search results

Sunday, July 3, 2016

எளிமையான சில தியானப் பயிற்சி

எளிமையான சில தியானப் பயிற்சிகளை அறிந்து கொள்வோம். மனதைத் தியானத்தில் லயிக்க வைப்பதில் ஓரளவு வெற்றி பெற்ற பின் மற்ற மேலான தியானப் ப்யிற்சிகளுக்குச் செல்லலாம்.

முதல் தியானம் மூச்சின் மீது கவனம் வைக்கும் தியானம். இது கிட்டத்தட்ட ஆல்ஃபா அலைவரிசைக்குச் செல்லச் செய்த பயிற்சியைப் போன்றது தான்.

1) அமைதியாக ஓரு அமைதியான இடத்தில் அமருங்கள். தரையில் சம்மணமிட்டு அமர முடிந்தவர்கள் அப்படி அமரலாம். முடியாதவர்கள் ஒரு நாற்காலியிலும் அமர்ந்து கொள்ளலாம். முடிந்த வரை நேராக நிமிர்ந்து இருங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சின் மீது கவனம் வையுங்கள். உங்கள் மூச்சு இயல்பானதாக இருக்கட்டும்.

2) மூச்சு உங்கள் மூக்கின் வழியாக உள்ளே சென்று வெளி வரும் பயணம் வரை அதன் மீதே உங்கள் கவனத்தை வைத்திருங்கள். மூச்சு முழுமையாகவும் சீராகவும் மாற ஆரம்பிக்கும்.

3) இனி மூச்சை எண்ண ஆரம்பியுங்கள்.

4) மூச்சை உள்ளிழுங்கள். ஒன்று. வெளியே விடுங்கள். இரண்டு. மீண்டும் உள்ளே இழுங்கள். மூன்று. வெளியே விடுங்கள். நான்கு........

5) உங்கள் கவனம் ஆரம்பங்களில் கண்டிப்பாக மூச்சை விட்டு மற்ற விஷயங்களுக்குச் செல்லலாம். அதை உணர்ந்த உடனேயே மீண்டும் மூச்சிற்கே கொண்டு வாருங்கள். எண்ணிக்கையைத் தொடருங்கள்.

6) உங்கள் மூச்சு தானாக ஆழமாகும், அமைதியாகும், வேகம் குறையும். எண்ணிக்கையைத் தொடருங்கள். நூறு ஆகும் வரை எண்ணி விட்டு நிறுத்துங்கள். பின் கண்களைத் திறந்து, நிதானமாக எழுந்து தியானத்தை முடியுங்கள்.

7) இந்த தியானத்தின் போது உடலில் பல்வேறு உணர்வுகளை நீங்கள் உணர்வீர்கள். மூச்சு மூக்கு தொண்டை பகுதிகளில் சென்று வரும் போதும், நுரையீரல், வயிற்றுப் பகுதிகளை நிறைத்து திரும்பும் போதும் இது வரை உணர்ந்திராத சில நுண்ணிய உணர்வுகளை நீங்கள் உணர ஆரம்பிக்கலாம். அதை உணரும் போதும் உங்கள் எண்ணிக்க்கையை நிறுத்தி விடாதீர்கள்.

8) ஆரம்ப காலங்களில் சிலருக்கு தசைப்பிடிப்பு போன்ற அசௌகரியங்கள் ஏற்படலாம். நீங்கள் உட்காரும் நிலையை சற்று மாற்றிக் கொள்வதில் தவறில்லை. ஆனால் மூச்சின் எண்ணிக்கை செய்வது தடைப்படாமல் இருக்கட்டும்.

இன்னொரு எளிய தியானத்தையும் அறிந்து கொள்ளலாம். இது தீப ஒளிச்சுடர் தியானம். 

இந்த தியானத்தை அரையிருட்டு அறையில் செய்வது நல்லது. உங்கள் கண்பார்வைக்கு நேரான ஓரிடத்தில் இரண்டு அல்லது மூன்று அடிகள் தூரத்தில் மெழுகு வர்த்தி அல்லது விளக்கு பற்ற வைத்துக் கொள்ளுங்கள்.
மேலே சொன்ன தியானத்தின் முதலிரண்டு படிகள் இந்தத் தியானத்திற்கும் பொருந்தும். முறையாக அமர்ந்து, கண்களை மூடி மூச்சை சீராக்கிக் கொள்ளுங்கள். மூன்றாவதாக மூச்சில் முழுக்கவனம் வைப்பதற்குப் பதிலாக, கண்களைத் திறந்து அந்த எரியும் தீபத்தின் ஒளிச்சுடரில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். எண்ணங்கள் அந்த தீப ஒளியை விட்டு ஓட ஆரம்பிக்கும் போதெல்லாம் மனதை மென்மையாக திரும்பவும் அந்த தீப ஒளிக்கே கொண்டு வந்து விடுங்கள். மனம் மெழுகுவர்த்தி பற்றியோ, விளக்கு பற்றியோ எண்ணக் கூட விடாதீர்கள். 

அந்த சுடர் மிகப்பிரகாசமாக எரிகின்றது, மிக மங்கலாக எரிகின்றது என்பது போன்ற எண்ணங்களைக் கூட வளர்த்தாதீர்கள். உடனே அதனுடன் சம்பந்தப்பட்ட மற்ற எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விடக்கூடும். தீப ஒளியில் மனம் லயிக்கப் பாருங்கள். மனம் அதை விட்டுச் செல்லும் போதெல்லாம் சலிக்காமல் அந்த தீபச்சுடருக்கே திரும்பக் கொண்டு வாருங்கள். நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள் என்று அறிந்த பின் உங்கள் மனம் சிறிது சிறிதாக அலைவதை நிறுத்தி வசப்படும். தியான நிலை கைகூடும். சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் இந்த தியானத்தைச் செய்து முடியுங்கள்.

இந்த இரண்டு தியானங்களையும் முடித்த பின்னரும் தடாலென்று எழுவது, உடனே பரபரப்பான சூழ்நிலைக்கு மாறுவது கூடாது. சற்று நிதானமாக தியான நிலையில் இருந்து இயல்பான நிலைக்குத் திரும்புங்கள்.அப்போது தான் அந்த தியானத்தால் பெற்ற அமைதியின் ஒரு பகுதியை மனதின் ஆழத்தில் நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
தினமும் இரு முறை தியானம் செய்ய முடிந்தவர்கள் காலை ஒரு தியானமும், மாலை ஒரு தியானமும் செய்யலாம். அப்படி இரண்டு முறை செய்ய முடியாதவர்கள் இந்த இரண்டு தியானங்களில் ஒன்றையாவது தினமும் செய்யுங்கள்.

Traditional Medications

மூலம்

இயற்கை மூலப்பொருட்கள்:
புளி-10கிராம்,துத்திவிதை-5கிராம்,வெந்தயம்-10கிராம்,கசகசா-5கிராம்,நாட்டுவாழைப் பழம்-50கிராம்.

உபயோகிக்கும் விதம்:
துத்தி,வெந்தயம்,கசகசா ஒன்றாக அரைத்து புளி,நாட்டு வாழைப்பழம் சேர்த்து பிசைந்து தினமும் இரவு 30கிராம் அளவிற்கு சாப்பிடவும்.குறைந்தது 7 நாட்கள் சாப்பிடவும்.

முடி வளர

இயற்கை மூலப்பொருட்கள்:
சணல்-50கிராம்,வெட்டிவேர்-50கிராம்,ஆவாரம்பூ-50கிராம்,கருவேப்பிலை-50கிராம்,நல்லெண்ணெய்-1லிட்டர்.

உபயோகிக்கும் விதம்:
இதில் உள்ள அனைத்து பொருட்களையும் 1லிட்டர் நல்லெண்ணெயில் சேர்த்து காய்ச்சவும்,தினமும் தலைக்கு தேய்க்கும் எண்ணெய் போல் பயன்படுத்தவும்.இவ்மருந்தை பயன்படுத்தினால் முடி கொட்டது,முடி அடர்த்தியாக இருக்கும்,கண்பார்வை அதிகரிக்கும்.

இயற்கை மூலப்பொருட்கள்:
ஆட்டுப்பால்-200மில்லி,உசிலை-20கிராம்,சீயக்காய்-20கிராம்.

உபயோகிக்கும்விதம்:
இதில்உள்ளஅனைத்துபொருட்களைநன்றாகஇடித்து 20கிராம்அளவிற்குஎடுத்து,ஆட்டுப்பால் 200மில்லிஅதில்கலந்துதலையில்நன்றாகதேய்த்து,பின்தலையைஅலசவும்.இவ்மருந்தைபயன்படுத்தினால்முடிபளபளப்பாகஇருக்கும்,உறுதியாகஇருக்கும்,கண்ணுக்குகுளிர்ச்சியாகயும்,முகம்அழகானதோற்றத்துடன்இருக்கும்.

கண்பார்வை அதிகரிக்க

இயற்கை மூலப்பொருட்கள்:
கோவை இலை-5கிராம்,சின்னவெங்காயம்-10கிராம்,சீரகம்-1கிராம்.

உபயோகிக்கும் விதம்:
இவைகளை ஒன்றாக அரைத்து,சீரகத்தை ஊர வைத்து ஒரு வெள்ளை துணியில் எடுத்து கண்ணீல் 3சொட்டு விடவும். சொட்டு விட்டவுடன் கண்களை முடிக்கொண்டு நன்றாக உருட்டவும்.மாதம் 1 முறை தான் செய்ய வேண்டும்,காலை எழுந்தவுடன் 6 முதல் 8 மணி வரை சூரியனை பார்க்க வேண்டும்.

மூக்கில் நீர் வடிதலுக்கு

இயற்கை மூலப்பொருட்கள்:
மிளகு-5,கேழ்வரகு-50கிராம்.

உபயோகிக்கும் விதம்:
மிளகை நாக்கில் கீழே ஒதுக்கி கொள்ளவும்.காலையில் இருந்து மாலை வரை அதை வாயில் ஒதுக்கவும்.கேழ்வரகு அரைத்து 100மில்லி தண்ணீர் கலந்து சூடாக்கி நெற்றில் பற்று போடவும்.

இரத்தக் கட்டு நீங்க

இயற்கை மூலப்பொருட்கள்:
சுண்ணாம்பு-10கிராம்,சித்தரத்தை-10கிராம்,தேன்.

உபயோகிக்கும் விதம்:
சித்தரத்தை நன்றாக பொடி செய்து சுண்ணாம்புடன் கலந்து வீக்கம் உள்ள இடத்தில் தடவவும்.அதன்பின் 2நிமிடம் கழித்து அந்த இடத்தில் சொட்டு,சொட்டாக தேன் விட்டு தடவவும்.3நாட்கள் செய்யவும்.

சத்து குறைவான ஆண்களுக்கு

இயற்கை மூலப்பொருட்கள்:
நெல்லிக்காய் - 1கிலோ, கருப்பட்டி-1கிலோ.

உபயோகிக்கும் விதம்:
இவைகளை புதிய மண்பானையில் ஊர வைத்து அந்த மண்பானையை மண்ணுக்குள் பதித்து பானையின் வாய் பகுதியை துணி வைத்து காற்று,பூச்சிப் புகாதவாறு நன்றாக இறுக்கி, கட்டி விட வேண்டும்.இது  வெயில் படும்படி 45நாட்கள் வைக்கவும்,பின் அந்த விதைகளை எடுத்து போட வேண்டும்,அதிலிருந்து காலை,மாலை சாப்பிடவும்.இதை போல் 3 மாதங்கள் சாப்பிடவும்.

நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும் பாகற்காய்!
பாகற்காயை சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு, இரத்த கொதிப்பு காரணமாக உண்டாகும் அரிப்பு மற்றும் இரத்த கோளாறு போன்றவற்றிற்கு பாகற்காய் சிறந்த மருந்தாகும்.

இரண்டு தேக்கரண்டி பாகற்காய் சாறுடன் எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல்நிலையில் மாற்றம் ஏற்படும்.

இரத்த கொதிப்பு இரத்த கோளாறுகள், போன்றவைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆரம்ப கட்டத்தில் ஏற்பட்டிருக்கும் காலரா மற்றும் வாந்தி, பேதியை போக்க இரண்டு தேக்கரண்டி பாகற்காய் இலையின் சாறு, இரண்டு தேக்கரண்டி டீத்தூள், வெங்காயச்சாறு இரண்டு தேக்கரண்டி, எலுமிச்ச சாறு இரண்டு தேக்கரண்டி சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் காலராவினால் ஏற்பட்ட வாந்தி, பேதி குணமாகும்.

பழுத்த பாகற்காய் இரத்தம் மற்றும் சீறுநீரில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது ஏனெனில் பாகற்காய் செடியில் இன்சுலின் கொண்டுள்ளது. குறிப்பிட்ட அளவு பாகற்காயை  ஜீஸ் செய்து சாப்பிட்டால் ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பது மட்டுமின்றி குளுக்கோஸ் சகிப்பு தன்மையை அதிகரிக்கிறது.

தொடர்ந்து பாகற்காய் சாறு சாப்பிட்டு வந்தால் ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும். நல்ல தூக்கத்தை ஏற்படுத்தவும் பாகற்காய் சிறந்ததாகும். பாகற்காயில் அதிக பீட்டா கரோட்டின் மற்றும் பிற பண்புகள் அடங்கியுள்ளன. இது கண்ணில் ஏற்படும் சிக்கல்களை போக்க சிறந்த மருந்தாகும். பாகற்காய் பழம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பலப்படும்.

பாகற்காற் பழத்தின் சாறு மது போதை மற்றும் நச்சுத் தன்மை நிறைந்த சிகிச்சைகளுக்கு சிறந்ததாகும். இது குடிப்பழக்கத்தினால் ஏற்படும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

கைகளில் ஏற்படும் அரிப்பு, கால்களில் ஏற்படும் தோல் தடிப்பு, சொரியாஸிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்க பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிடவேண்டும். பாகற்காய் நச்சுத் தன்மையை அகற்றி இரத்தத்தை சுத்திகரிப்பதில்  முக்கிய பங்கு வகிக்கிறது.


சுவாச கோளாறு மற்றும் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால் பாகற்காயை பொரியல் செய்தோ அல்லது ஜீஸ் செய்தோ சாப்பிட சுவாச கோளாறுகளில் ஏற்பட்ட பிரச்சனை தீரும்.

Monday, June 20, 2016

எதற்காக குளிக்கிறோம்?

உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.

அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!

சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?

குளியல் = குளிர்வித்தல்

குளிர்வித்தலோ மருவி குளியல் ஆனது.

மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.

இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் நேங்கியிருக்கும்.

காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.

வெந்நீரில் குளிக்க கூடாது. எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.

குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.

நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.

எதற்கு இப்படி. காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி, விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.

நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.

இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருங்கள்.

குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி நினையும். வெப்பம் கீழ் இருந்து மேல் எழுப்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.

இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா. உச்சந்தலைக்கு
சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.

இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும்
குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.

எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது.

வியக்கவைக்கிறதா... !  நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும்
ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

குளித்துவிட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.

அதே ஈரத்துணியோடு நாம் அரச மரத்தை சுற்றி வந்தால் 100% சத்தமான பிராணவாயுவை நமது உடல் தோல் மூலமாக கிரகித்துக்கொள்ளும்.

பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.

புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.

குளியலில் இத்தனை விடையங்கள் இருக்கும் போது.
குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஸ்சேம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.

குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்

குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.

குளித்தல் = குளிர்வித்தல்

குளியல் அழுக்கை நீக்க அல்ல

உடலை குளிர்விக்க.

இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு
அக்கறை இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள்.

நலம் நம் கையில்

கோவிலில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும்?

கோவிலில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும்?

தெரிந்து கொள்வோம்;-

கோவிலில் வாயில்படி இருந்தால், அதை
பெரும்பாலான பக்தர்கள் தொட்டு
கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள்.

வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட
வேண்டும்?

இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம்
முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள்.

ஒரு பக்தன், கோவில் வாசல்படியை தொட
குனியும் போது அது முதலில்அவனிடம்
பணிவை ஏற்படுத்துகிறது.

அடுத்து அது அவன் உடம்பில் உள்ள சூரிய
நாடியை இயக்குகிறது.

படிக்கட்டை தொட்ட
பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில்
புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மீது
வைத்து அழுத்த வேண்டும்.

இது நம்மிடம் உள்ள தீய சக்திகளை விரட்டும்.

அதோடு தெய்வ சன்னதிகளில் இருந்து வரும்
அருள் அதிர்வலைகளை மிக எளிதாக நமக்குள்
கிரஹிக்க செய்யும்.

எனவே அடுத்த தடவை கோவிலுக்கு
செல்லும் போது படிகளை வலது கையால்
தொட்டு, உங்கள் புருவ மத்தியில் சற்று
அழுத்தம் கொடுத்துப் பாருங்கள்...

அது
உங்களை புது மனிதனாக்கி, புத்துணர்ச்சியுடன் கோவிலுக்குள் செல்ல வைக்கும்.

உள்ளமும், உடலும் சிலிர்க்க வைக்கும்.

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

புலன் கடந்த ஆற்றல் (ESP)

புலன் கடந்த ஆற்றல்(ESP) என்றால் என்ன?
நாம் புலன்களுக்கு எட்டாத காரியத்தை செய்யும்போது அதை நாம் சித்து என்றும் புலன்கடந்த ஆற்றல் என்றும் கூறுவோம். உதாரணமாக தண்ணீரில் நடப்பது, காற்றில் எழும்புவது, கண்ணை கட்டிக்கொண்டு படிப்பது, எங்கோ நடப்பதை இங்கிருந்தே பார்ப்பது, மனதை படிப்பது இப்படி பல உள்ளது.

இவை எல்லாமே மனித மூளையின் உச்சபட்ச செயல்பாடே ஒழிய வேறில்லை. நம் மூளையின் பயன்பாடு குறிப்பிட்ட எல்லையை தாண்டிவிட்டால் அவை புலன்களுக்கு கட்டுபடாது.

அதை எப்படி வளர்த்துக் கொள்வது?
எண்ண ஓட்டங்கள் குறைய குறைய மூளையின் செயல்திறன் அதிகரித்து கொண்டே போகும்.  Extra Sensory Perceptionஐ எல்லோராலும் வளர்த்து கொள்ள முடியும் ஆழ்ந்த தியானத்தால்.

ஆழ்மன பதிவை எப்படி மாற்றுவது?
நம் வாழ்வை பெரும்பாலும் வெறும் ஐந்து நிமிடங்களே தீர்மானிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம் நாம் படுத்தபின்  உறங்குவதற்கு முன்பு இருக்கும் அந்த ஐந்து நிமிடங்கள்தான் அவை. அப்போது நாம் எதைப்பற்றி சிந்திந்து கொண்டே உறங்குறோமோ அது நம் ஆழ்மனதால் விடிய விடிய பரிசீலிக்கப்பட்டு விரைவில் நம்மை வந்தைடைந்தே தீரும்.

தயவுசெய்து இனி படுத்தபிறகு அந்த நேரத்தில்  பிரச்சனைகளை பற்றி யோசித்துவிடாதீர்கள். பிறகு அந்த பிரச்சனையே வாழ்கையாகிவிடும்.
உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதை அடைந்துவிட்டதாக சிந்தித்து கொண்டே உறங்குங்கள். அது பிடித்த உறவு, பொருளாதார சூழல், ஆரோக்கியம் இப்படி எதுவாகவும் இருக்கலாம்.

அந்த நேரத்தில் மூச்சை கவனித்துக் கொண்டே உறங்குபவன் மறுநாள் எழும்வரை ஆழ்ந்த தியான நிலையிலேயே இருந்திருப்பான்.

ஆழ்மன சக்தியை எது எதுக்கு பயன்படுத்த முடியும்?
நாம் கற்பனை கூட செய்ய முடியாத அனைத்தும் சாத்தியமாகும் வாய்ப்பு இந்த பிரபஞ்சத்தில் உள்ளது.

சாத்தியமாக வாய்ப்பு இல்லாத எதையும் நீங்கள் யோசிக்கவே முடியாது. அதனால் நல்லவை அனைத்திற்கும் ஆழ்மன சக்தியை பயன்படுத்தலாம்
வாழ்வில் வெற்றி பெற்ற பலரும் அதிகாலை எழும் பழக்கம் உள்ளவர்களே.

ஆம் நாம், பூமி,  இயற்கை என அனைத்தும் அந்த நேரத்தில் உச்சகட்ட ஆற்றலோடு செயல்படும். பிரம்மம் பூமியில் கலக்கும் அதாவது முகூர்த்தம் ஆகும் நேரமே பிரம்ம முகூர்த்தம்,
வாழ்க வளமுடன்

காத்திருக்க பழகு !


பசிக்கும் வரை காத்திரு
உடல் நீர் கேட்கும் வரை காத்திரு
காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை காத்திரு
சளி வெளியேரும் வரை காத்திரு
உடல் தன்னனை சீர்படுத்தும் வரை காத்திரு
உலையில் அரிசி வேகும் வரை காத்திரு
பயிர் விளையும் வரை காத்திரு
கனி கனியும் வரை காத்திரு
மரம் மரமாகும் வரை காத்திரு
செக்கு எண்ணெய்யை பிரிக்கும் வரை காத்திரு
தானியத்தின் உமி நீங்கும் வரை காத்திரு
தானியம் கல்லில் மாவாகும் வரை காத்திரு
துவையல் அம்மியில் அரைபடும் வரை காத்திரு
தேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு
உணவு தயாராகும் வரை காத்திரு
"இது உன்னுடயை வாழ்க்கை,
ஒட்டப்பந்தையம் அல்ல".
ஒடாதே
நில்
விழி
பார்
ரசி
சுவை
உணர்
பேசு
பழகு
விரும்பு
உன்னிடம் காத்திருப்பு பழக்கம் இல்லாததினாலேயே,
உன் வாழ்கைமுறைக்கு சற்றும் பொருந்தாத, தேவையில்லாத பொருட்களும், செய்திகளும் உன் மேல் தினிக்கப்படுகிறது
உன் மரபனுவிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விச உணவுகள் உன் மேல் தினிக்கப்படுகிறது
அவசரம் உன்னையும், உன் சந்ததியையும் அழிக்கும் ஆயுதம் என்பதை மறவாதே.
"நீ இதற்கெல்லாம் காத்திருந்தால் உன் உயிர் உன்னைவிட்டு பிரியும் வரை காத்திருக்கும்"
காத்திருக்க பழகு
வாழப்பழகுவாய்.

தூங்கும் முறை

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது...

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 

மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், 

உடல்வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ] பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது. 

இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள்  கூறுகின்றனர். 

தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர். 

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.

இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.

 

"சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்

கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை

நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை

நம்பிக் காண்"

 

இதன் விளக்கம் :-

இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில்[உடலில்]சோர்வு,

பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும். 

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

 

"உத்தமம் கிழக்கு

ஓங்குயிர் தெற்கு

மத்திமம் மேற்கு

மரணம் வடக்கு"

 

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.

தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.

மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.

வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

 

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி

தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன்,

இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். மேலும் மல்லாந்து கால்களையும்,கைகளையும் 

அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் 

(பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, 

தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை 

நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும். 

இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் 

வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான 

வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். 

இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும். 

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். 

இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். 

இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்

 

சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன் பெருவோம்.