Wikipedia

Search results

Monday, June 20, 2016

எதற்காக குளிக்கிறோம்?

உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.

அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!

சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?

குளியல் = குளிர்வித்தல்

குளிர்வித்தலோ மருவி குளியல் ஆனது.

மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.

இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் நேங்கியிருக்கும்.

காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.

வெந்நீரில் குளிக்க கூடாது. எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.

குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.

நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.

எதற்கு இப்படி. காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி, விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.

நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.

இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருங்கள்.

குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி நினையும். வெப்பம் கீழ் இருந்து மேல் எழுப்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.

இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா. உச்சந்தலைக்கு
சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.

இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும்
குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.

எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது.

வியக்கவைக்கிறதா... !  நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும்
ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

குளித்துவிட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.

அதே ஈரத்துணியோடு நாம் அரச மரத்தை சுற்றி வந்தால் 100% சத்தமான பிராணவாயுவை நமது உடல் தோல் மூலமாக கிரகித்துக்கொள்ளும்.

பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.

புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.

குளியலில் இத்தனை விடையங்கள் இருக்கும் போது.
குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஸ்சேம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.

குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்

குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.

குளித்தல் = குளிர்வித்தல்

குளியல் அழுக்கை நீக்க அல்ல

உடலை குளிர்விக்க.

இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு
அக்கறை இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள்.

நலம் நம் கையில்

கோவிலில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும்?

கோவிலில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும்?

தெரிந்து கொள்வோம்;-

கோவிலில் வாயில்படி இருந்தால், அதை
பெரும்பாலான பக்தர்கள் தொட்டு
கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள்.

வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட
வேண்டும்?

இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம்
முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள்.

ஒரு பக்தன், கோவில் வாசல்படியை தொட
குனியும் போது அது முதலில்அவனிடம்
பணிவை ஏற்படுத்துகிறது.

அடுத்து அது அவன் உடம்பில் உள்ள சூரிய
நாடியை இயக்குகிறது.

படிக்கட்டை தொட்ட
பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில்
புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மீது
வைத்து அழுத்த வேண்டும்.

இது நம்மிடம் உள்ள தீய சக்திகளை விரட்டும்.

அதோடு தெய்வ சன்னதிகளில் இருந்து வரும்
அருள் அதிர்வலைகளை மிக எளிதாக நமக்குள்
கிரஹிக்க செய்யும்.

எனவே அடுத்த தடவை கோவிலுக்கு
செல்லும் போது படிகளை வலது கையால்
தொட்டு, உங்கள் புருவ மத்தியில் சற்று
அழுத்தம் கொடுத்துப் பாருங்கள்...

அது
உங்களை புது மனிதனாக்கி, புத்துணர்ச்சியுடன் கோவிலுக்குள் செல்ல வைக்கும்.

உள்ளமும், உடலும் சிலிர்க்க வைக்கும்.

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

புலன் கடந்த ஆற்றல் (ESP)

புலன் கடந்த ஆற்றல்(ESP) என்றால் என்ன?
நாம் புலன்களுக்கு எட்டாத காரியத்தை செய்யும்போது அதை நாம் சித்து என்றும் புலன்கடந்த ஆற்றல் என்றும் கூறுவோம். உதாரணமாக தண்ணீரில் நடப்பது, காற்றில் எழும்புவது, கண்ணை கட்டிக்கொண்டு படிப்பது, எங்கோ நடப்பதை இங்கிருந்தே பார்ப்பது, மனதை படிப்பது இப்படி பல உள்ளது.

இவை எல்லாமே மனித மூளையின் உச்சபட்ச செயல்பாடே ஒழிய வேறில்லை. நம் மூளையின் பயன்பாடு குறிப்பிட்ட எல்லையை தாண்டிவிட்டால் அவை புலன்களுக்கு கட்டுபடாது.

அதை எப்படி வளர்த்துக் கொள்வது?
எண்ண ஓட்டங்கள் குறைய குறைய மூளையின் செயல்திறன் அதிகரித்து கொண்டே போகும்.  Extra Sensory Perceptionஐ எல்லோராலும் வளர்த்து கொள்ள முடியும் ஆழ்ந்த தியானத்தால்.

ஆழ்மன பதிவை எப்படி மாற்றுவது?
நம் வாழ்வை பெரும்பாலும் வெறும் ஐந்து நிமிடங்களே தீர்மானிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம் நாம் படுத்தபின்  உறங்குவதற்கு முன்பு இருக்கும் அந்த ஐந்து நிமிடங்கள்தான் அவை. அப்போது நாம் எதைப்பற்றி சிந்திந்து கொண்டே உறங்குறோமோ அது நம் ஆழ்மனதால் விடிய விடிய பரிசீலிக்கப்பட்டு விரைவில் நம்மை வந்தைடைந்தே தீரும்.

தயவுசெய்து இனி படுத்தபிறகு அந்த நேரத்தில்  பிரச்சனைகளை பற்றி யோசித்துவிடாதீர்கள். பிறகு அந்த பிரச்சனையே வாழ்கையாகிவிடும்.
உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதை அடைந்துவிட்டதாக சிந்தித்து கொண்டே உறங்குங்கள். அது பிடித்த உறவு, பொருளாதார சூழல், ஆரோக்கியம் இப்படி எதுவாகவும் இருக்கலாம்.

அந்த நேரத்தில் மூச்சை கவனித்துக் கொண்டே உறங்குபவன் மறுநாள் எழும்வரை ஆழ்ந்த தியான நிலையிலேயே இருந்திருப்பான்.

ஆழ்மன சக்தியை எது எதுக்கு பயன்படுத்த முடியும்?
நாம் கற்பனை கூட செய்ய முடியாத அனைத்தும் சாத்தியமாகும் வாய்ப்பு இந்த பிரபஞ்சத்தில் உள்ளது.

சாத்தியமாக வாய்ப்பு இல்லாத எதையும் நீங்கள் யோசிக்கவே முடியாது. அதனால் நல்லவை அனைத்திற்கும் ஆழ்மன சக்தியை பயன்படுத்தலாம்
வாழ்வில் வெற்றி பெற்ற பலரும் அதிகாலை எழும் பழக்கம் உள்ளவர்களே.

ஆம் நாம், பூமி,  இயற்கை என அனைத்தும் அந்த நேரத்தில் உச்சகட்ட ஆற்றலோடு செயல்படும். பிரம்மம் பூமியில் கலக்கும் அதாவது முகூர்த்தம் ஆகும் நேரமே பிரம்ம முகூர்த்தம்,
வாழ்க வளமுடன்

காத்திருக்க பழகு !


பசிக்கும் வரை காத்திரு
உடல் நீர் கேட்கும் வரை காத்திரு
காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை காத்திரு
சளி வெளியேரும் வரை காத்திரு
உடல் தன்னனை சீர்படுத்தும் வரை காத்திரு
உலையில் அரிசி வேகும் வரை காத்திரு
பயிர் விளையும் வரை காத்திரு
கனி கனியும் வரை காத்திரு
மரம் மரமாகும் வரை காத்திரு
செக்கு எண்ணெய்யை பிரிக்கும் வரை காத்திரு
தானியத்தின் உமி நீங்கும் வரை காத்திரு
தானியம் கல்லில் மாவாகும் வரை காத்திரு
துவையல் அம்மியில் அரைபடும் வரை காத்திரு
தேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு
உணவு தயாராகும் வரை காத்திரு
"இது உன்னுடயை வாழ்க்கை,
ஒட்டப்பந்தையம் அல்ல".
ஒடாதே
நில்
விழி
பார்
ரசி
சுவை
உணர்
பேசு
பழகு
விரும்பு
உன்னிடம் காத்திருப்பு பழக்கம் இல்லாததினாலேயே,
உன் வாழ்கைமுறைக்கு சற்றும் பொருந்தாத, தேவையில்லாத பொருட்களும், செய்திகளும் உன் மேல் தினிக்கப்படுகிறது
உன் மரபனுவிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விச உணவுகள் உன் மேல் தினிக்கப்படுகிறது
அவசரம் உன்னையும், உன் சந்ததியையும் அழிக்கும் ஆயுதம் என்பதை மறவாதே.
"நீ இதற்கெல்லாம் காத்திருந்தால் உன் உயிர் உன்னைவிட்டு பிரியும் வரை காத்திருக்கும்"
காத்திருக்க பழகு
வாழப்பழகுவாய்.

தூங்கும் முறை

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது...

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 

மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், 

உடல்வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ] பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது. 

இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள்  கூறுகின்றனர். 

தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர். 

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.

இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.

 

"சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்

கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை

நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை

நம்பிக் காண்"

 

இதன் விளக்கம் :-

இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில்[உடலில்]சோர்வு,

பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும். 

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

 

"உத்தமம் கிழக்கு

ஓங்குயிர் தெற்கு

மத்திமம் மேற்கு

மரணம் வடக்கு"

 

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.

தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.

மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.

வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

 

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி

தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன்,

இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். மேலும் மல்லாந்து கால்களையும்,கைகளையும் 

அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் 

(பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, 

தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை 

நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும். 

இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் 

வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான 

வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். 

இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும். 

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். 

இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். 

இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்

 

சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன் பெருவோம்.

Thursday, June 16, 2016

இதைத்தான் சர்க்கரை நோய் என்கிறார்கள் !

அனைவரும் அலோபதி மயக்கத்தில் முழ்கி இருக்கும் இந்த நாட்டில், நம் மரபு மருத்துவத்தை தேடி வந்த உங்கள் அனைவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.

இன்று நாம் அனைவரும் கூடியிருப்பது சர்க்கரை நோய் என்று சொல்லப்படும் நீரிழிவு பிரச்சனையை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவே.

முதலில் நம் உடல் எதனால் உருவானது என்று பார்போம்.

நமது உடல் பல லட்சம் கோடிக்கனக்கான செல்களால் ஆனது. ஒவ்வொறு செல்களுக்கும் அறிவு இருக்கிறது. இதன் முக்கிய வேலை நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உட்கிரகித்து, கழிவுகளை  வெளியேற்றவது. உட்கிரகித்தல், வெளியேற்றுதல் இதன் முக்கிய வேலை.

உதாரணத்திற்கு ஒரு மண் பொம்மையை காட்டி, தலையை சுட்டிக்காட்டி இது என்ன என்று கேட்டால், தலை என்பீர்கள். கால்களை சுட்டிக்காட்டி இது என்ன என்று கேட்டால், கால் என்பீர்கள். இந்த இரண்டு பகுதியையும் கையால் நசுக்கி பொடித்தால் அங்கு என்ன இருக்கும் ?...... எண்ணில் அடங்கா சிறு, சிறு மண் துகள்கள் மட்டுமே இருக்கும் அல்லவா.

இது போல் தான் நம் உடலும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பல லட்சம் கோடிக்கணக்கான செல்களால் ஆனது.

இப்பொழுது உடல் எப்படி இயங்குகிறது என்று பார்ப்போம்.

பொதுவாக ஒரு பொருள் இயங்க வேண்டும் என்றால் என்ன வேண்டும் ?..... ம் சொல்லுங்க. ஏதாவது ஒரு எரிபொருள் வேண்டும் அல்லவா.

உதாரணத்திற்கு வாகனங்கள் இயங்க வேண்டும் என்றால், பெட்ரோல் என்கிற எரிப்பொருள் வேண்டும். மின் சாதனம் இயங்க வேண்டும் என்றால் ?... மின்சாரம் வேண்டும்.

இது போல் நமது உடல் இயங்க வேண்டும் என்றால் என்ன வேண்டும் ? நமது உடலுக்கு எது எரிபொருள் ? உணவு வேண்டும்ங்க. சரி அந்த உணவு செரிமானத்தின் கடைசியில் என்ன வாக மாறுகிறது ? நாம் உண்ணும் மாவுச்சத்துக்கள் தேவையான அளவு சர்க்கரையாக மாறுகிறது, மீதம் உள்ளவை புரதமாகவோ, கொழுப்பாகவோ மாற்றப்படுகிறது. சர்க்கரை என்பது நாம் பயன்படுத்தும் இனிப்பல்ல இது ஒரு சத்துப்பொருள்.

நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் இந்த சர்க்கரை எனும் சத்துப்பொருள் செல்கள் உட்கிரகித்து, எரித்து வெப்ப சக்தி வழங்குகிறது.

இந்த வெப்ப சக்தியால் தான் நாம் இயங்குகிறோம். 

இப்ப சொல்லுங்க நாம் இயங்குவதற்கு என்ன வேண்டும் ?...... சர்க்கரை எனும் சத்துப்பொருள் வேணுமுங்க.  சரியா சொன்னிங்க.

ஒரு பெரியவர் படுத்த படுக்கையாக இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் உடலை தொட்டுப்பார்த்தால் எப்படி இருக்கும் ?... உடல் சூடாக இருக்கும். அடுத்தநாள் இயற்கை எயதி விட்டார், இப்பொழுது உடலை தொட்டுப்பார்த்தால் எப்படி இருக்கும்?... உடல் ஐஸ் போல் இருக்கும்.

உயிரோடு இருக்கும் போது உடலில் என்ன இருந்தது ?... வெப்பம் இருந்தது. உயிர் இல்லாத போது உடலில் என்ன இல்லை ?... வெப்பம் இல்லை.

இப்பொழுது சொல்லுங்க உயிரோடு இருக்க வேண்டும் என்றால் என்ன வேண்டும் ?.... வெப்பம் வேணுமுங்கோ. வெப்பம் சக்தி எப்படி நமக்கு கிடைக்கிறது ?... உணவில் உள்ள சர்க்கரை (மாவுச்சத்து) செல்களால் எரிக்கப்பட்டு வெப்ப சத்தி கிடைக்குதுங்க.

இப்ப சொல்லுங்க, நாம உயிரோட இருக்கனும் நா என்ன வேண்டும் ?... சர்க்கரை வேணும் ங்க. சரியா சென்னிங்க. இவருக்கு எல்லோரும் கை தட்டுங்க.
பாருங்கள் மக்களே, நாம் உயிரோடு இருக்க தேவைப்படும் ஒரு அதிஅவசிய சர்க்கரை என்னும் சத்துப்பொருளால் நமக்கு நோய் ஏற்படுகிறது என்கிறார்களே, இதுவே இவர்களின் உச்சகட்ட கொடூர மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.

இது வரைக்கும் உடல் எதனால் ஆனது., எப்படி இயங்குகிறதென்று பார்தோம்.

இப்பொழுது செரிமானத்தை பற்றி பார்போம்.

நாம் உண்ணும் உணவு வாயில் உமிழ் நீருடன் கலந்தவுடன் செரிமானம் ஆக துவங்கிவிடுகிறது, பின் வயிற்றில் அமிலத்துடன் கலந்து செரிக்கப்பட்டு, சிறுகுடலுக்கு செல்கிறது இங்கு பித்த பையில் இருந்து வரும் பித்த நீரால் செரிக்கப்படுகிறது. பின் இந்த செரிக்கப்பட்ட உணவுக்கூழில்  உள்ள சத்துக்கள் சிறுகுடலின் கடைசிப்பகுதியில் இரத்ததில் கலக்கிறது. பின் கழிவுகள் பொருங்குடலுக்கு சென்று வெளியேற்றப்படுகிறது.

வாய், வயிறு, சிறுகுடலில் செரிமானம் சரியாக நடந்தால், இரத்தத்தில் கலந்த சத்துப்பொருட்கள்  தரமான  சத்துப்பொருட்களாக இருக்கும். செரிமானம் சரி இல்லை என்றால். சத்துப்பொருட்கள் தரமற்றவையாக இருக்கும்.

பொதுவாகவே நமது உடலுக்கு நன்மையை ஏற்றுக்கொள்ளும் திறனும். தீமையை வெளியேற்றும் திறனும் இயல்பாவே இருக்கிறது.

எப்படி என்று கேட்கிறீர்களா ? இதோ செயல் முறை விளக்கம்.

இப்பொழுது நீங்கள் பசி யோடு இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நான் உங்களுக்கு மிகவும் பிடித்த உணவை உங்கள் கண் முன்னே கொண்டு வந்து காட்டிச்செல்கிறேன். இப்பொழுது வாயில் என்ன மாற்றம் நிகழும் ?.... ஐய்யா எச்சில் ஊறுகிறது. ம் சரி.
அதே உணவை உங்கள் கண் முன்னே கீழே போட்டு மிதித்துவிட்டேன், அதை அப்படியே தட்டில் எடுத்து வைத்து மீண்டும் உங்கள் அருகில் கொண்டு வந்து காட்டிச்செல்கிறேன். இப்பொழுது எப்படி இருக்கும் ? உமிழ் நீர் சுரக்குமா ?.... சுரக்கவில்லைங்க, கொமட்டீட்டு தான் வருகிறது.

இவ்வளவுதாங்க விடையமே. நல்லதிற்கு நமது உடல் உமிழ் நீர் சுரந்து ஏற்றுக்கொள்கிறது. கெட்டதற்கு உமிழ் நீர் சுரக்காமல் ஏற்க மறுக்கிறது.

நமது உடலில் பல சுரபு உறுப்புகள் இருக்கின்றன. உமிழ் நீர் சுரபிகள், தைய்ராய்டு, தைமஸ், கணையம் போன்ற பல சுரப்புறுப்புக்கள் இருக்கிறது.

இதே போல் தான் கணையமும். இரத்தத்தில் இருக்கும் நல்ல சர்க்கரைக்கு இன்சுலின் சுரக்கிறது கெட்ட சர்க்கரைக்கு இன்சுலின் சுரப்பதில்லை.

எது நல்லது, எது கெட்டது. முன்னால் பார்த்தோம் அல்லவா. செரிமானம் சரியாக இருந்தால் இரத்தத்தில் கலக்கும் சத்துப்பொருள் தரமானதாக இருக்கும் எனவும். செரிமானம் சரி இல்லை என்றால் தரமற்றவையாக இருக்கும்.

தரமான சர்க்கரையை, நல்ல சர்க்கரை என்றும். தரம் குறைந்த சர்க்கரை கெட்ட சர்க்கரை, என்றும் வைத்துக்கொள்வோம்.

நமது உடல் என்ன செய்யும் என்று செயல் விளக்கத்தோடு பார்தோம் ? நல்லதை ஏற்றுக்கொள்ளும், கெட்டதை வெளியேற்றும்.

அதேப்போல் தான் நல்ல சர்க்கரை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கெட்ட சர்க்கரை சிறுநீரகம் மூலம் வெளியேற்றப்படுகிறது.

சரி. நாம் இப்பொழுது உண்கிறோம். என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.

உணவு வாயில் போட்டவுடன் உமிழ் நீர் கலந்து செரிமானம் வேலை ஆரம்பமாகிறது. பின் உணவு வயிற்றுக்கு செல்கிறது இங்கு அமிலம் மற்றும் பல செரிமான நீர்களுடன் கலந்து செரிமானம் ஆகிறது. பின் சிறுகுடலுக்கு சென்று பித்த நீர் கலந்து செரிமானம் ஆகிறது. சிறுகுடல் இறுதியில் சத்துப்பொருட்கள் இரத்தத்தில் கலக்கிறது.

நீங்கள் உண்ட உணவு அறைகுறையாக செரிமானம் ஆகி உள்ளது என்று வைத்துக்கொள்வோம். எனவே பாதி தரமான சத்துப்பொருளும், பாதி தரம் குறைந்த சத்துப் பொருளும் கிடைக்கிறது. இவை அனைத்தும் இரத்தத்தில் கலந்தாச்சு.

உதாரணத்திற்கு 100 சர்க்கரை கிடைத்துள்ளது என்று வைத்துக்கொள்வோம். இதில் 50 நல்ல சர்க்கரை, 50 கெட்ட சர்க்கரை. இது அனைத்தும் இரத்தில் ஒடிக்கொண்டிருக்கிறது. கணையம் அருகே வரும் போது. கணையம் ஒவ்வொறு சர்க்கரையாக பரிசோதனை செய்து பார்க்கும். இவை தரமானதா, தரமற்றதா. உடலுக்கு நன்மை செய்யக்கூடியதா, தீமை செய்யக்கூடியதா என்று பரிசோதித்து, நல்ல சர்க்கரைக்கு மட்டும் இன்சுலின் வழங்கும், ஒரு கெட்ட சர்க்கரைக்கும் கூட இன்சுலின்  வழங்காது.

நாம் முன்னே செயல் விளக்கத்தோடு பார்த்தோம் அல்லவா. உடல் நல்ல உணவிற்கு உழிழ் நீர் சுரந்தது, கெட்ட உணவிற்கு சுரக்கவில்லை. இதேதான் இங்கேயும் நடக்கிறது.

தற்போது இன்சுலினுடன் 50 சர்க்கரையும், இன்சுலின் இல்லாமல் 50 சர்க்கரையும் இரத்தத்தில் ஒடிக்கொண்டிருக்கிறது. செல்கள் இன்சுலின் உள்ள சர்க்கரைக்கு மட்டுமே கதவை திறக்கும். இந்த 50 நல்ல சர்க்கரையும் செல்களுக்குள்ளே போய்விடும். பின் இது எரிக்கப்பட்டு வெப்ப சத்தி நமக்கு கிடைக்கிறது. இந்த சத்தி மூலமே நாம் இயங்குகிறோம்.  இன்சுலின் இல்லாத சர்க்கரையை சிறுநீரகம் கண்டறிந்து சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடுகிறது. உடலே நல்லதை, கெட்டதை கண்டறிந்து என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துவிட்டது. நாம் இப்பொழுது ஆரோக்கியமாக இருப்போம்.

நீங்கள் செய்யும் வேலைக்கு 30 சர்க்கரை போதும் என்று வைத்துக்கொள்வோம். மீதம் உள்ள 20 நல்ல சர்க்கரையை உடல் என்ன செய்யும் ?... உதாரணத்திற்கு நமக்கு தேவையைவிட பணம் அதிகம் இருந்தால் என்ன செய்வோம், சேமித்து வைப்போம் அல்லவா. அது போல் தான் உடல் தேவைக்கு அதிகமாக இருக்கும் சர்க்கரையை கூட்டு சர்க்கரையாக (Glycogen) செரிவூட்டி கல்லீரல், தசைநார்களில் சேமித்துவைத்துக்கொள்கிறது.

இந்த சேமிக்கப்பட்ட சர்க்கரை எப்போது எதற்கு பயன்படுகிறது, நாம் செய்யும் வேலைக்கு நல்ல சர்க்கரை போதவில்லை என்றால் லேசாக கிறுகிறுப்பு ஏற்பட்டு கண்கள் இருட்டடையும் போது இந்த சேமிக்கப்பட்ட சர்க்கரை இரத்தத்தில் கொட்டப்படுகிறது. நமக்கு ஏதாவது காயம் எற்பட்டால், அந்த காயத்திற்கு அருகில் இருக்கும் தசைநார்களில் சேமிக்கப்பட்ட சர்க்கரை அங்கு இருக்கும் செல்களை புதுப்பித்து காயத்தை ஆற்ற பயன்படுத்தபடுகிறது. நமக்கு எங்காவது விபத்து ஏற்பட்டு ரோட்டில் கிடந்தால், உறுப்புகள் சீராக இயங்குவதற்காக சேமிக்கப்பட்ட சர்க்கரை இரத்தத்தில் கொட்டப்பட்டு நமது உயிரை காக்க பயன்படுகிறது.

நாம் எப்படி நமக்கு பணம் இல்லாத போது சேமித்த பணத்தை பயன்படுத்துகிறோமோ. அது போல் நமது உடல் ஆபத்து காலங்களில் சேமிக்கப்பட்ட சர்க்கரையை பயன்படுத்துகிறது.

இப்ப சொல்லுங்க மனிதனுக்கு எது உண்மையான சொத்து ?... பணம் காசு வீடு, வாகனமா ? நிச்சயம் கிடையாது. நாம் சேமித்த சர்க்கரையே நமக்கு உண்மையான சொத்து.

எவர் வந்தாலும் வராவிட்டாலும். எது இருந்தாலும் இல்லாவிட்டாலும். இறுதியில், இந்த சர்க்கரையே உங்கள் கூட இருந்து உயிரை காக்கும். நாம் எதற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது நமது உடல், நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரை, அதிகப்படியான நல்ல சர்க்கரைகளை எப்படி கையாள்கிறது என்று பார்தோம். இது மனிதன் தோன்றிய காலம் முதல் நடந்து வரும் இயற்கை நிகழ்வு.
இந்த மாவுச்சத்து பொருளுக்கு எவன் சர்க்கரை என்று பெயர் வைத்தான் என்று தெரியவில்லை. இது நம்மை குழப்புவதற்காக சூழ்ச்சி செய்து வைக்கப்பட்டுள்ளது. செரிமான கோளாறால் ஏற்படும் அதிக நீரிழிவு பிரச்சனைக்கு எவன் சர்க்கரை நோய் என்று பெயர் வைத்தான் என்று தெரியவில்லை.

நாம் உண்ணும் சர்க்கரைக்கும் (இனிப்பு) இந்த சர்க்கரை நோய் என்று சொல்லப்படும் நீரிழிவு பிரச்சனைக்கும் துளி கூட சம்மந்தம் கிடையாது.

சர்க்கரை என்பது ஒரு சுவை. அவர்கள் கூறும் சர்க்கரை (மாவுச்சத்து) என்பது ஒரு சத்து பொருள்.

மனிதனுக்கு செரிமானம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இனிப்பு சுவை மிக மிக அவசியமானது. இனிப்பு சுவையால் மட்டுமே உங்கள் வயிற்றிற்கும், மண்ணீரலுக்கும் சக்தி வழங்க முடியும்.

இலை போட்டு முதலில் இனிப்பு வைத்தவன் எல்லாம் முட்டாள்
வீட்டு தின்னையில் வழிப்போக்கர்களுக்கு ஒரு மூடி தேங்காயும் ஒரு உருண்டை கருப்பட்டி வைத்தவன் எல்லாம் முட்டாள்.

விழா காலங்களில் இனிப்பு பண்டம் செய்து உண்டவன் எல்லாம் முட்டாள்.

இனிப்பை சாப்பிடக்கூடாது என்று சொல்லும் ஆங்கில மருத்துவர்கள் அறிவாளிகள்.

எதற்கு இலையில் முதலில் இனிப்பை வைத்தார்கள் ? அனைத்து உணவையும் சாப்பிட்டுவிட்டு இறுதியில் இனிப்பை வீட்டிற்கு மூட்டைகட்டி செல்லவா !,  இனிப்பை முதலில் உண்ண வேண்டும். இனிப்பு சுவை நாக்கில் பட்டவுடன் மின்காந்த அலையாக மாறி நேரடியாக வயிற்றிற்கும், மண்ணீரலுக்கும் சக்தியை வழங்குகிறது. பின் நாம் என்ன சாப்பிட்டாலும் அது நன்கு செரிமானம் ஆகி நல்ல சத்துக்களாக இரத்தத்தில் கலக்கிறது.

உங்கள் மருத்துவர் என்ன சொல்லுவார் இனிப்பு சாப்பிடக்கூடாது. இனிப்பு சாப்பிடாவிட்டால் வயிறு, இதற்கு சக்தி வழங்கும் மண்ணீரலுக்கு சத்தி கிடைக்காது. இப்பொழுது உணவு உண்டால் செரிமானம் எப்படி இருக்கும் ? அறைகுறையாக. கிடைக்கும் சத்துப்பொருட்கள் பெரும்பாலும் கெட்ட சத்துப்பொருளாகவே இருக்கும். இவைகளை உடல் என்ன செய்யும் சிறுநீர் மூலம் வெளியேற்றிவிடும். நாம் எப்படி இருப்போம் சோர்வுடன் நோயாளியாகவே இருப்போம்.

நம்மை நோயாளியாக்கி சாகடிப்பதற்காக இவர்கள் செய்த முதல் தந்திரம். மாவுச்சத்திற்கு சர்க்கரை என்று பெயர் வைத்தது, இனிப்பு சாப்பிடக்கூடாது என்று சொன்னது.

இனிப்பை சாப்பிடக்கூடாது என்று செரிமானத்தை கெடுத்ததோட விட்டார்களா ! இல்லை.

இவர்களின் அடுத்த கட்ட கொலைகார செயல்களை பார்போம்.

இப்பொழுது உங்களுக்கு அதிக நீரிழவு, தாகம், சோர்வு, அதிக பசி. ஏற்படுகிறது இவை அனைத்திற்கும் என்ன காரணம்? அரைகுறை செரிமானத்தால் இரத்தத்தில் கலந்த கெட்ட சத்துப்பொருட்கள் வெளியேறுவதே காரணம். நீங்கள் என்ன செய்ய வேண்டும் ? செரிமானம் சரியாக என்ன வழிவகையோ அதை செய்ய வேண்டும். செரிமானத்தை சரி செய்தால் மேலே குறிப்பிட்ட அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.

ஆனால் நீங்கள் என்ன செய்வீர்கள்,  உங்கள் அருகில் உள்ள மேதாவி உனக்கு சர்க்கரை நோய் இருக்கக்கூடும் போய் பரிசோதித்துக்கொள் என்பார். நீங்களும் பரிசேதனை செய்து பார்க்க போவீர்கள். அங்கு எவன் எப்பொழுது மாட்டுவன் எப்படியெல்லாம் அவன் தலையில் மிளகாய் அரைக்கலாம் என்று 5 வருடம் படித்துவிட்டு வெள்ளை கோர்ட்டு போட்டு கழுத்தில் பாசக்கயிறை மாட்டிக்கொண்டு ஒரு பூதம் உட்காந்திருக்கும். உங்கள் இரத்தத்தை பரிசோதனை செய்து பார்த்து, உங்களுக்கு சர்க்கரை அதிகம் உள்ளது. நீங்கள் சர்க்கரை நோயின் ஆரம்பகட்டத்தில் உள்ளீர்கள் என்பார்கள். இதில் என்ன பரிதாபமான விடையம் என்றால். நல்ல மற்றும் கெட்ட சர்க்கரை இரண்டிற்கும் இவர்களுக்கு வித்தியாசம் தெரியாது, இரண்டுமே சேர்த்துதான் இவர்களால் சொல்ல முடியும்.

அந்த சர்க்கரை நல்ல சர்க்கரையா, கெட்ட சர்க்கரையா ? கணையம் பரிசோதித்து இன்சுலின் வழங்கப்பட்டுவிட்டதா இல்லையா ? சர்க்கரை செல்களுக்குள் சென்று எரிக்கப்பட்டுவிட்டதா ? சிறுநீரகத்தால் கெட்ட சர்க்கரை கண்டரிந்து வெளியேற்றப்பட்டுவிட்டதா அல்லது வேலை நடந்து கொண்டிருக்கிறதா ? அதிக நல்ல சர்க்கரை தசைநார்களில் சேமிக்கப்பட்டுவிட்டதா, இல்லை சேமிப்பு வேலை நடந்து வருகிறதா ? நீங்கள் செய்யும் வேலைக்கு சர்க்கரை போதுமானதா இல்லையா என்று எதுவும் அந்த அப்பாவி Robotic மருத்துவர்களுக்கு தெரியாது. இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அளவுகளை பார்த்து மாத்திரை கொடுப்பது மட்டுமே.

நல்ல சர்க்கரைக்கும், கெட்ட சர்க்கரைக்கும் இயந்திரங்களுக்கு வித்தியாசம் தெரியாது. இரண்டிற்கும் ஒரே Chemical formula வைத்தான் காட்டும், Glucose - C6H12O6. இதோ உதாரணம் அடிக்கரும்பு எப்படி இருக்கும் ?... நன்கு இனிப்பு சுவை உடையதாக இருக்கும் ங்க. சரி நுனிக் கரும்பு எப்படி இருக்கும் ?...
இனிப்பு குறைவாக சல்லென்று இருக்கும். இந்து அடிக்கரும்பையும், நுனிக்கரும்பையும் ஒரு Lab ல் கொடுத்து பரிசோதனை செய்யது பாருங்கள் Sucrose - C12H22O11 என்று ஒரே Chemical formula வைதான் காட்டும். எப்படி நமக்கு சுவையில் வித்தியாசம் தெரிந்து இயந்திரத்திற்கு தெரியவில்லையோ, அதேப்போல்தான் தரமான சர்க்கரைக்கும்( நல்ல )மற்றும் தரமற்ற சர்க்கரைக்கும் (கெட்ட) உடலுக்கு வித்தியாசம் தொரியும், இயந்திரங்களுக்கு தெரியாது.

இப்பொழுது புரிகிறதா ஏன் ஆங்கில மருத்துவத்திற்கு நல்ல மற்றும் கெட்ட சர்க்கரைக்கு வித்தியாசம் தெரியவில்லை என்று. இவர்கள் தன் சொந்த மூலையை விட மனிதன் உருவாக்கிய இயந்திரத்தை மட்டுமே நம்புவார்கள்.

சரி, இப்பொழுது நீங்கள் சர்க்கரை நோயாளி என்று முத்திரை குத்தப்பட்டுவிட்டார்கள். மாத்திரை எழுதி கொடுத்துவிட்டார்கள்.

இவர் எந்த அளவை வைத்து உங்களை சர்க்கரை நோயாளி என்று முடிவு செய்தார் ? யார் அளவை நிர்ணயம் செய்தது ? இந்த சர்க்கரை மாத்திரை எதற்கு கண்டுபிடிக்கப்பட்து ? உண்மையில் ஆரோக்கியத்திற்கு அளவு ஏதும் உண்டா ? என்று பார்ப்போம்.

ஆங்கில மருத்துவம் அறுவைசிகிச்சை செய்யத்துவங்கும் காலகட்டத்தில், இரத்த போக்கு அதிகம் ஏற்பட்டு உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சையின் போது ஒரு மாத்திரை கொடுக்கப்பட்டு அறுவைசிகிச்சை செய்துபார்த்தார்கள். இது அவர்களுக்கு வெற்றியாக அமைந்து. அறுவை சிகிச்சையின் போது மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த இந்த மாத்திரையை எப்படி உலகம் முழுவதும் வியாபாரம் செய்து கோடிகோடியாய் பணம் சம்பாதிப்பது என்று இரவு பகலாக ஆங்கில மருத்துவ உலகம், மருந்து மாத்திரை பெருநிறுவனங்கள் இணைந்து ஆலோசனை செய்து ஒரு முடிவிற்கு வந்தார்கள். அந்த முடிவு என்ன ?

மதிய உணவு இடைவேளை பிறகு பார்ப்போம். சரியாக 1/2 மணி நேரம் கழித்து துவங்குவோம்.

சர்க்கரைக்கு அவர்களே ஒரு அளவை நிர்ணயித்து, இதற்கு மேல் சென்றாலும் நோய், கீழ் சென்றாலும் நோய் என்று பொய் பிரச்சாரம் செய்வதென முடிவெடுத்தார்கள்.

இதன் படி உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் மாட்டுவர்கள். இவர்களிடம் மாத்திரை விற்பனை செய்து கோடி கோடியாய் சம்பாதிக்கலாம் என்பதே இவர்களின் நோக்கம்.

ஆரம்ப காலத்தில் இவர்கள் முடிவு செய்த சர்க்கரைக்கான அளவு 40,60 என இருந்தது பின் ஒவ்வொறு 20 வருடங்களுக்கு பிறகு, இது தவறு, இது தான் சரி என்று மாற்றிவிடுவார்கள், 80,100,120,140 என மாற்றம் அடைந்துள்ளது. இவர்கள் முன்னே சொன்ன அளவு எல்லாம் பொய்யா, இதற்கு மாத்திரை சாப்பிட்டு மாண்டவர்கள் எல்லாம் முட்டாளா ?... பதில் யாரிடமும் இல்லை.

இந்த வியாபாரிகள் விரித்த வலையில் தான் நீங்கள் இப்போது சிக்கி உள்ளீர்கள்.

உண்மை என்னவென்றால் சர்க்கரை இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. சர்க்கரையை பரிசோதித்து பார்பதே மிகப்பெரிய முட்டாள்தனம்.

ஒரு மினிதன், அவர் வாழும் பகுதி, அவர்கள் பண்பாடு, கலாச்சாரம், அவர் செய்யும் வேலை ( உடல் உழைப்பு), மன நிலை, உணவு, சுற்றுச்சூழல், நீர், செரிமாண மண்டலத்தின் சக்தி, பிராண சக்தி இவைகளை பொருத்து சர்க்கரையின் அளவு ஒவ்வொருவருக்கும் மாறிக்கொண்டே இருப்பது தான் இயற்கை.

உண்மை இப்படி இருக்கும் போது, எதன் அடிப்படையில் உலகம் முழுவதும் அனைத்து மனிதர்களுக்கும், இவர்களால் ஒரே அளவை நிர்ணயம் செய்ய முடிகிறது. இதை வைத்தே தெரியவில்லையா ?.... இவர்களின் நோக்கம் உலக மக்களை நோயாளிகளாக்கி,  அவர்களின் செவ்வம் மற்றும் ஆரோக்கியத்தை சுரண்டும் கொடூர பாவச்செயல்களை செய்கிறார்கள் என்று.

நீங்கள் என்ன செய்தீர்கள், மாத்திரை டப்பாவை வாங்கி வீட்டிற்கு வந்துவிட்டீர்கள். இப்பொழுது உணவெடுக்கிறீர்கள். செரிமானம் அறைகுரையாக இருக்கிறது. இதனால் 70 கெட்ட சர்க்கரையும், 30 நல்ல சர்க்கரையும் இரத்தத்தில் கலக்கிறது என்ற வைத்துக்கொள்வோம். உடல் என்ன செய்யும் 70 கெட்ட சர்க்கரையை கண்டரிந்து சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். 30 நல்ல சர்க்கரை செல்களுக்குள் சென்றுவிடும்.

இப்பொழுது மாத்திரை சாப்பிடுகிறீர்கள். இது என்ன செய்யும் நேரடியாக கணையத்திடம் சண்டையிட்டு 70 கெட்ட சர்க்கரைக்கும் இன்சுலின் வாங்கி கொடுக்கும் கொடூர செயலை செய்யும், இந்த 70 கெட்ட சர்க்கரையும் இன்சுலினுடன் இரத்தத்தில் சுற்றிக்கொண்டிருக்கும். செல்கள் இன்சுலின் இருப்பதால் கதவை திறந்து ஏற்றுக்கொள்ளும். இந்த கெட்ட சர்க்கரையை செல்களால் சரியாக எரிக்கப்பட்டு வெப்ப சக்தியாக மாற்ற முடியாது. எனவே முதல் முதலில் உங்கள் செல்களில் கழிவு தங்குகிறது.

உதாரணத்திற்கு நல்ல சர்க்கரையை வெயிலில் நன்கு காய்ந்த விறகாக கற்பனை செய்துகொள்ளுங்கள். கெட்ட சர்க்கரையை காயாத ஈர விறகாக கற்பனை செய்துகொள்ளுங்கள். செல்களை அடுப்புகளாக கற்பனை செய்துகொள்ளுங்கள்.

அடுப்பின் வேலை என்ன?.. விறகை எரித்து வெப்ப சக்தி வழங்குவது. செல்களின் முக்கிய வேலை என்ன?.. சர்க்கரையை எரித்து வெப்ப சக்தி வழங்குவது. நன்கு காய்ந்த விறகை அடுப்பில் எரித்தால் அங்கு என்ன மிச்சம் இருக்கும் ?... சிறிது சாம்பல் மட்டுமே. வெப்ப சக்தியும் முழுமையாக கிடைத்துவிடும். ஈர விறகை எரித்தால் என்ன நடக்கும் ?... சரியாக எரியாமல் புகைந்து புகைந்து விறகு அடுப்பில் தங்கிவிடும். சரியாக வெப்ப சக்தியும் கிடைக்காது. இது போல் தான் நம் செல்களும் கெட்ட சர்க்கரையை முழுமையாக எரிக்க முடியாமல் கழிவு செல்களில் தங்கிவிடுகிறது.

உலகத்தில் உள்ள அனைத்து நோய்களுக்கும் ஒரே காரணம்தான். அது என்ன ? இயற்கை விதிமீறல் செயல்களால் கழிவுகள் நமக்குள் தங்குவதே காரணம். கழிவு தேக்கம் நோய். கழிவு நீக்கம் குணம்.

உடல் சரியாக கெட்ட சர்க்கரையை கண்டரிந்து சிறுநீர் மூலம் வெளியேற்றிய தரமற்ற சர்க்கரையை நாம் சொந்த செலவில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு செல்களுக்குள்ளையே செலுத்துவதுதான் உங்கள் அறிவியலின் உச்சகட்ட அற்புத செயல்.

சாக்கடைக்கு செல்ல வேண்டிய ஒரு தேவையற்ற பொருளை, நாம் செல்களுக்குளே செலுத்துவதால் கழிவுகள் செல்களில் தங்கி அந்த செல் பாதிக்கிறது. இத தொடர்ந்து நடக்கும் போது. அந்து உறுப்பு பாதிக்கிப்படுகிறது. உறுப்புகள் பாதிக்கப்பட்டால் அதன் வேலையை சரியாக செய்ய முடியாது. இதனால் மேலும் கழிவுகள் உள்ளேயே தங்க, சொல்லிலடங்கா துயரங்களுக்கு ஆளாகுகிறோம்.

இப்பொழுது தெரிகிறதா சர்க்கரை நோய் வந்தால் ஏன் எல்லா நோய்களும் வருகிறதென்று. சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு பிரச்சனை வந்தால் எந்த நோயும் வராது. இதற்கு மாத்திரை அல்லது இன்சுலின் ஊசி போடுவதின் மூலமே அனைத்து நோய்களும் வருகிறது.

சாதாரணமாக உள்ள செரிமானப்பிரச்சனையை சரி செய்திருந்தால் உங்கள் அனைத்து பிரச்சனையும் சரியாகியிருக்கும் அதைவிட்டுவிட்டு, பன்னாட்டு வியாபாரிகளின் கொடிய விசப் பொருட்களை துளி கூட சிந்திக்காமல், அப்படியே நாம் ஏற்றுக்கொண்டதால் உணர்ச்சியற்ற நோய் பிண்டங்களாக காட்சியளிக்கிறோம்.

நீரிழிவு காரணங்கள் !
--------------------------------

சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு பிரச்சனைக்கு மூன்றே காரணம்தான். அனைத்து நீரிழிவு நோயாளிகளும் இதில் அடங்குவார்கள்.

1 - அதிக கவலை
2 - அவசரமாக சாப்பிடுவது
3 - அதிக உடல் வெப்பம்

சர்க்கரை நோயாளி என்னு சொல்லப்படும் செரிமானக் கோளாறு உள்ளவர்கள் அனைவருக்கும் இதில் ஒரு காரணமாவது நிச்சயம் பொருந்தும். பரிசோதித்து பாருங்கள். என்னங்க நான் சொன்னது சரியா... !

எப்படி குணப்படுத்துவது  ?
-----------------------------------------

1 : கவலை - சாப்பிடும் பொழுது கவலை எல்லாம் மறந்து உணவின் மேல் முழுகவனமும் செலுத்தி சாப்பிட வேண்டும். கவலைக்கு உண்டான காரணங்களை சரி செய்ய முயற்சிக்க வேண்டும்.

2 : அவசரமாக சாப்பிடுவது - அவசரமாக டிக்கட் எடுக்க விரும்புபவர்கள் தாராளமாக அவசரமாக சாப்பிடலாம். "நொறுங்கத்தின்றால் நூறு ஆயுசு", பசி எடுத்தால் மட்டுமே உணவெடுக்க வேண்டும்.
ஒரு முறை நன்கு சிந்தித்து பாருங்கள் நாம் எதற்காக இவ்வளவு பாடுபடுகிறோம் என்று, இறுதியில் சாப்பிடுவதற்காகவே என்று உணர்வீர்கள். அதை இப்பவே உணர்ந்து பொறுமையாக சாப்பிடலாமே. நம் நலனுக்காக நம் உடலை இவ்வளவு பாடுபடுத்துகிறோம், ஏன் உடல் நலனுக்காக நாம் 1/2 மணி நேரம் ஒதுக்கி பொறுமையாக சாப்பிடக்கூடாது.

சாப்பிடும் பொழுது உலகத்தையே மறந்துவிட வேண்டும். உணவிற்கு முன் இனிப்பான பழங்களை சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது உணவை பார்த்து நமது முழு கவனமும் உணவின் மேல் செலுத்தி மென்று ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும்.

கோதுமையை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

3 : அதிக உடல் வெப்பம் - பச்சை தண்ணீரில் குளிப்பது. வாரம் இரண்டு நாள் எண்ணெய் குளியல். நீர்காய்கனிகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

இனி இந்த செரிமானப்பிரச்சனையை யாரும் நோய் என்று சொல் வேண்டாம். நீரிழிவு என்பதே பொருந்தும். தேவையில்லாத, கெட்ட சத்து பொருட்கள் அனைத்தும் சிறுநீர் முலமே வெளியேறும், சர்க்கரை மட்டும் அல்ல. நீரிழிவை சரி செய்ய மேலே குறிப்பிட்ட மூன்று காரணத்தையும் சரி செய்தால் குணம் பெற்றுவிடுவீரகள்.

சர்க்கரை நோய் - செரிமானக்கோளாறால் ஏற்படும் நீரிழிவு பிரச்சனை.

தீர்வு - இனிப்பான பழங்களை சாப்பிடுவது. உணவை பசிக்கும் போது மென்று ரசித்து ருசித்து சாப்பிடுவது.

இனி நாம் யாரும் பன்னாட்டு வியாபாரிகளின், உயிரை குடிக்கும் இரசாயண மாத்திரைகளையும் இன்சுலின்களையும் எடுக்க மாட்டோம் என்று உறுதி எடுப்போம். மூளையில், மழுங்கி கிடக்கும் நமது முளையை சற்று பயன்படுத்தி சிந்திக்க துவங்குவோம்.

பன்னாட்டு கொலைகார வியாபாரிகளின், கொடூர வச தன்மை உள்ள பொருட்களை விற்கும் சந்தையாக உங்கள் உடலை மாற்றிவிடாதீர்கள்.

"உள்ளமே பெருங்கோவில்
ஊநுடலே ஆலையமாம்"

ஆலையத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி

- நலம் நம் கையில்


புற்று நோய் (sodium bicarbonate (NaHCO3))

மக்கள் பயப்படும் நோய்களில் ஒன்றான கேன்சர் ( புற்றுநோய் ) மருத்துவத்துறையில்  மிகப்பெரிய சவாலான ஒரு நோயாகவே இருக்கிறது, ஏழை, பணக்காரன் , உயர்ந்தவர்தாழ்ந்தவர், நல்லவர் , கெட்டவர் என்ற பாகுபாடு இல்லாமல் உலக மக்களில் 8 மில்லியன்  பேர் இந்த கேன்சர் நோயால் பாதிக்கப்படுள்ளனர், இன்றளவும் முழுமையான மருந்து கண்டுபிடிக்கப்படவே இல்லை. இந்தப்பதிவு வெளிவந்த பின் அந்த நிலை மாறும். அரிய பல விடயங்களை பகிர்ந்துகொள்ள இருக்கிறோம் அதனால் முழுமையாக இந்தப்பதிவை படிக்கவும்.

எல்லாம் வல்ல நம் விநாயகப் பெருமானுக்கும் நம் குருநாதர் அகத்தியர் பெருமானுக்கு  முதலில் எல்லையில்லாத நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். கேன்சர் நோய் பற்றி பலரும் கேள்விபட்டு இருக்கலாம் இது ஒரு கொடிய நோய் ஒருமுறை வந்துவிட்டால் வேகமாக பரவும், இரத்தத்தில் வரலாம் , கட்டியாக வரலாம், எலும்புகளில் வரலாம் என பல விதமாக வரும் இந்த நோய் உண்மையில் பயப்படக்கூடிய நோய் அல்ல. இது ஒரு  வகையான பூஞ்சை காளான் நோயாகும்.

சரியாக 6 வருடங்களுக்கு முன் ஒருவர் கேன்சர் நோய்க்கு மருந்து கேட்டு இமெயில் அனுப்பி இருந்தார். ஆரம்ப நிலையில் இருக்கும் கட்டி என்று தெரிவித்திருந்தார். அப்போது அவருக்கு அகத்தியர் நூலில் இருந்து ஒரு பதிலைத் தெரியப்படுத்தி இருந்தோம். 48 நாட்களில் குணம் கிடைத்தது. அதன் பின் அதே மாதத்தில் இன்னொரு நபர் இமெயிலில் கேன்சருக்கு மருந்து கேட்டிருந்தார் ஆனால் அவருக்கு இந்த மூலிகை மருந்து வேலை செய்யவில்லை. கேன்சர் செல்களின் அசுர வளர்ச்சியை குறைக்க முடியவே இல்லை. அகத்தியரின் நூல்களில் ஆயூர்வேத முறைப்படி கூறியுள்ள அனைத்து மூலிகைகளை  பயன்படுத்தியும் எள்ளவும் குறையவே இல்லை

இதன் பின் தான் இதற்கான மருந்து  தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. இந்த நோயிலிருந்து மக்களை காப்பாற்ற முடியவில்லையே என்று குருநாதரின் மேல் கோபம் கூட வந்தது, அதன் பின் சில மாதங்கள் கழித்து ஒரு வயதான பெண்மனி நான்கே நான்கு ஓலைச்சுவடிகளை மட்டும் எடுத்துக்கொண்டு வந்து நம்மிடம் கொடுத்து இது எங்க அய்யா காலத்தில் பெட்டியில் வைத்திருந்தார் இதில் என்ன இருக்கிறது என்று படித்து சொல்லலாமா என்றார்
இதில் ஏதோ மருத்துவ குறிப்பு இருக்கிறது என்று கூறினோம், உடனே அந்த பெண்மணி இது உங்களிடம் இருக்கட்டும் என்று கூறி சென்றுவிட்டார். அதன் பின் அந்த ஓலைச்சுவடியில் ஒரு பாட்டு இருந்தது அதை இங்கு பகிந்து கொள்கிறோம்.

வினையான வினையது அதிகமானால் பொல்லா சூது வரும்
விட்டொழியும் பொய்யும் பிரட்டும் உலகில் வலம் வரும்
பூஞ்சையும் நஞ்சும் இடமறியாமல் உடலில் பொங்கி வரும்
பூவுலகில் மருந்தில்லை என்று ஒடுவான் பொய் வைத்தியன்
நோயறிந்த பின் வழி தெரியாமல் அழியும் மக்கள் கோடா கோடி
நல்வேளையும் நாகதாளியும் முறைப்படி எடுத்து உப்பாக்கினால்
உனக்கு நிகர் வைத்தியன் பூமியில் இல்லை என்பார்கள் சான்றோர்
பூஞ்சையும் நஞ்சும் பூண்டோடு விட்டு விலகும் தானே !
                                                                     – அகத்தியர் ஏட்டுகுறிப்பு 17

கேன்சர் என்பது நம் உடலுக்கு நஞ்சை விளைவிக்கும் ஒரு வகையான பூஞ்சை காளான்  என்பதை அகத்தியர் தம் ஏட்டு குறிப்பில் உணர்த்தியதோடு அதற்கான மருந்தையும் தன் பாட்டிலே தெரியப்படுத்தியுள்ளார். இதில் நல்வேளை என்ற மூலிகை என்பது தைவேளை என்ற செடியை குறிக்கும். நாகதாளி என்பது ஒரு வகையான கொடி, இதன் பூ பாம்பு சீறிக்கொண்டு இருப்பதை போல் தோன்றும். இந்த இரண்டையும் எடுத்து உப்பாக்கி கொடுத்தால் நோய் தீரும் என்று பாட்டில் இருக்கிறது.

நாகதாளி மூலிகையை கண்டுபிடிக்கவே இரண்டு ஆண்டுகள் சென்றுவிட்டது. குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே இந்த கொடி வளரும் என்பதையும் பனி அதிகமாக இருக்கும் காலங்களில் தான் இதை கண்டறிந்து பறிக்க முடியும் என்பதையும் இங்கு தெரிவிக்கிறோம். குறிப்பிட்ட காலத்தில் இரண்டையும் பறித்து முப்புக்கான அடிப்படை முறையில் இதை உப்பாக்கி வைத்து சூரிய ஒளியில் காயவைத்து எடுத்துக்கொண்டோம். அதன் பின் இந்த உப்பை நன்றாக  பொடியாக்கி மருத்துவ துறையில் வேலை செய்யும் ஒரு ஆராய்ச்சி மாணவரிடம் கொடுத்து இதில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்று பார்த்து சொல்லுங்கள் என்று கொடுத்து அனுப்பினோம். அவரும் மூன்று நாட்கள் கழித்து எங்களை ஏன் இப்படி சோதிக்கிறீர்கள் என்று கேட்டார், நமக்கு ஒன்றும் புரியவில்லை என்றோம். அவர் கூறினார் நீங்கள் என்னிடம் கொடுத்தது சோடியம் பை கார்பனேட் உப்பு தானே என்றார், இல்லை  என்று கூறி மறுபடியும் நன்றாக சோதித்து சொல்லுங்கள் என்று நம்மிடம் உள்ள உப்பில் இன்னொரு பகுதியை எடுத்துக்கொடுத்தோம்

இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் கூறினார் அதில் இருப்பது சோடியம் பை கார்பனேட் ( sodium bicarbonate (NaHCO3) )  தான் என்றார். நாமும் புரியாமல் இதைப்பற்றிச் சொல்லுங்கள் என்றோம் உடனடியாக  அவர் கூறினார் இதுதான்சமையல் சோடாஅல்லது சோடா உப்பு என்று சொல்வார்களே அது தான் இது என்று கூறியதோடு இது நுண்கிருமிகளை அழிக்கும், துணியில் இருக்கும் அழுக்கைக்கூட இந்த நீரில் ஊறவைத்தாலே சுத்தமாகிவிடும், வயிற்று உப்பிசத்த்திற்கு, அஜீரணக்கோளாறுகளை சரிபடுத்தவும் இதில் 1/4 ஸ்பூன் தண்ணீரில் கலக்கி குடிப்பார்கள்  என்றார் அவர்.

அதன் பின் சோடியம் பை கார்பனேட் (Sodium bicarbonate) தொடர்பாக இணையத்தில் தேடி பார்த்தபோது பல ஆச்சர்யமான உண்மைகள் கிடைத்தது.
2008 – ஆம் ஆண்டு சிமோன்சினி (Simoncini) என்ற இத்தாலி நாட்டு மருத்துவர் சோடியம் பை கார்பனேட் என்ற உப்பை கொண்டு கேன்சர் நோயை குணப்படுத்தி தன் வலைப்பூவில்  வெளியீட்டுள்ளார். இதன் முகவரி http://www.curenaturalicancro.com/en/
பல கேன்சர் நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுத்து குணம் அடைந்ததை ஆதாரத்துடன் தன் வலைப்பூவில் வெளியீட்டுள்ளார். இதுவரை கேன்சர் தொடர்பான  ஆராய்ச்சிகள் என்னென்ன என்பதையும் ஒவ்வொரு விஞ்ஞானிகள் என்னென்ன  கண்டுபிடித்துள்ளார்கள் என்பதையும் இங்கு வீடியோவாக கொடுத்துள்ளோம்.

ஈவு இரக்கமே இல்லாமல் கேன்சர் நோயை வைத்து பணம் பறிக்கும் கொள்ளை கூட்டம்  இவரின் மேல் பல புகார்களை கூறி வழக்குகள் பல தொடர்ந்தும் இவரின் உண்மை  தன்மையால் வெளிவந்ததோடு அறிவுடைய மக்களிடையே இந்த மருத்துவ முறை  சென்றடைந்துள்ளது.

மருத்துவரால் கைவிடப்பட்ட சில கேன்சர் நோயாளிகளுக்கு இந்த மருந்தைப்பற்றிக் கூறி இருந்தோம் இதில் மூளைப்புற்று நோயால் பாதிக்கப்ப்பட்டவர்களைத் தவிர மற்ற கேன்சர் நோயாளிகளுக்கு இம்மருந்து நன்றாக வேலை செய்தது. மூளைப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர் சிமோன்சினி நேரடியாக ஊசி மூலம் சோடியம் பை கார்பனேட் செலுத்தி  குணப்படுத்தியுள்ளார் என்பதையும் அவரது தளத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.

வலி தாங்கமுடியாத மார்பகப் புற்று நோய் முற்றிய ஒரு பெண்மணிக்கு இந்த சிகிச்சைப்பற்றி தெரியப்படுத்தி தினமும் அந்த பெண்மணி இந்த சோடியம் பை கார்பனேட் தண்ணீரில் கலக்கி துணியில் வைத்து மார்பகத்திற்கு ஒத்தடம் மட்டுமே கொடுத்து குணமடைந்துள்ளார். அதன் பின் மருந்துவரிடம் சென்று காட்டியதற்கு இது கேன்சர் கட்டியே இல்லை அதனால் தான் குணமாகிவிட்டது என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் அகத்தியர் தம் பாடலில் குறிப்பிட்டபடி இது  ஒருவகையான பூஞ்சை காளான் நோய் என்றே சிமோன்சினி மருத்துவரும் தெரிவிக்கிறார். சோடியம் பை கார்பனேட் எந்தவிதமான பாதிப்பும் பக்கவிளைவுகளும் இல்லாத மருந்து  என்று தெரிவிக்கிறார்

அளவோடு இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில்  தினமும் காலை 1 ஸ்பூன் சோடியம் பை கார்பனேட் மருந்தை 1 டம்ளர் தண்ணீரில்  நன்றாக கலக்கி 1 வாரத்திற்கு எடுக்க வேண்டும் அதன் பின் இரண்டாவது வாரத்தில்  இருந்து காலை 1 ஸ்பூன் மருந்தும், இரவு 1/2 ஸ்பூன் மருந்தாக சோடியம் பை கார்பனேட் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று மாதம் இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டாலே நோய் குணமாகும். முக்கியமாக சில கேன்சர் நோயாளியின் உடல் நிலை  கருதி சில நேரங்களில் அவர் மருந்து எடுக்கும் நாட்களில் சோர்வாக காணப்பட்டால் 1
நாள் அல்லது இரண்டு நாள் மருந்தை நிறுத்தி அதன் பின் மூன்றாவது நாளில் இருந்து மருந்தை மறுபடியும் கொடுக்கலாம் என்கிறார்.

இந்த கேன்சர் மருந்தைப்பற்றியும் சித்தர்களின் பாடல்கள் பற்றி முழுமையாக ஆய்வு செய்து மக்களுக்கு இம்மருத்துவ முறையை கொண்டு சேருங்கள் என்று இந்திய மருத்துவ கவுன்சிலிற்கு நாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகவல் அனுப்பியும் இன்று வரை எந்தப் பதிலும் இல்லை.

நாகதாளி என்ற மூலிகையை நமக்கு எடுத்து கொடுப்பதற்காக இரண்டுஆண்டுகளாக காட்டில் ஒருபகுதி கூட விடாமல் சளைக்காமல் தேடி எடுத்து கொடுத்த அன்பர்கள் , இதற்கு வாகன உதவி செய்த நண்பர்கள், உணவு , இருப்பிடம் என அனைத்தும் செய்து கொடுத்த மலைவாழ் மக்கள் என உங்கள் ஒவ்வொருவருக்கும் எம் சிரம் தாழ்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம். எத்தனை நாட்கள் எங்களுக்காக உங்கள் தூக்கத்தை தொலைத்திருப்பீர்கள், பசியோடு இரவு பகல் பாராமல் எத்தனை நாட்கள் காடுகளில் அலைந்திருப்பீர்கள், தானும் தம் குடும்பமும் மட்டுமே வாழவேண்டும் என்ற சுயநலமுள்ள மக்கள் மத்தியில் எந்த நம்பிக்கையில் நீங்கள் எங்களை நம்பி இந்த உதவி செய்தீர்கள் என்று தெரியவில்லை. இந்த வெற்றி உங்களால் தான் சாத்தியம் ஆகி இருக்கிறது. கண்ணீருடன் மறுபடியும் ஒருமுறை நன்றியை தெரிவிக்கிறோம். வலைப்பூ வாயிலாக அன்பையும் ஆதரவையும் தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.

நம் குருநாதரின் ஆசியோடு இந்த மருத்துவ முறையை ஒளிவு மறைவு இல்லாமல் நேரடியாக உள்ளபடியே நம் தமிழ் உறவுகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். இதைப்படிக்கும் ஒவ்வொரு நபரும் மறக்காமல் இந்தப்பதிவை எல்லா தமிழ்மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இயற்கை மருத்துவத்தை ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் இது தொடர்பாக மேலும் பல ஆராய்ச்சி செய்து இம்மருந்தை திறமாக மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்பது நம் எண்ணம்.

கட்செவி : சித்த மருத்துவம்